மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

மிஷ்கின் - சித் ஸ்ரீராம் தரப்போகும் ஆச்சரியத்துக்கு கபிலன்தான் காரணம்! எப்படி தெரியுமா?

மிஷ்கின் - சித் ஸ்ரீராம் தரப்போகும் ஆச்சரியத்துக்கு கபிலன்தான் காரணம்! எப்படி தெரியுமா?

நடிகராகவோ, இயக்குநராகவோ வருடத்துக்கு ஒரு படத்திலாவது தலைகாட்டிவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் மிஷ்கின். ஏனெனில், 2017இல் துப்பறிவாளன், 2018இல் சவரக்கத்தி, 2019இல் சூப்பர் டீலக்ஸ், 2020இல் சைக்கோ என நடிப்பில் கவர்ந்துவிடுகிறார், இல்லையெனில் இயக்குநராக மிளிர்கிறார்.

கடந்த வருடம் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி பார்வை சவால்கொண்ட கதாபாத்திரத்தில் நடித்த சைக்கோ படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, படத்தில் இளையராஜா இசையில் பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றது. மிஷ்கினின் இந்த வருடத்துக்கான படம் பிசாசு 2. ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் டி.முருகானந்தம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

பிசாசுவாக ஆண்ட்ரியா நடிக்கிறார். படத்தில் முக்கிய ரோலில் பூர்ணா நடிக்க இருக்கிறார். ஏற்கெனவே, இவரின் சவரக்கத்தி படத்தில் பூர்ணா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவுக்குப் பதில் இந்த முறை, கார்த்திக் ராஜாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மிஷ்கின். படத்துக்கான இரண்டு பாடல்கள் ஏற்கெனவே தயாராகிவிட்டது. சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா ஒரு பாடலும், பாடகி ஶ்ரீநிதி ஒரு பாடலும் பாடியிருக்கிறார்கள்.

தற்போது, பாடகர் சித் ஸ்ரீராம் குரலில் ஒரு பாடல் பதிவை முடித்திருக்கிறார் மிஷ்கின். இந்தப் பாடலுக்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து பாடிக்கொடுத்தாராம் சித். இதற்கு கபிலன்தான் காரணம் என்று சொல்கிறார்கள். சித் ஸ்ரீராமிடம் பாடலுக்காகப் பேசும்போது, முதலில் பாடல் வரிகளை அனுப்பச் சொன்னாராம். அப்படி, கபிலன் எழுதிய பாடல் வரிகளையும், அதற்கான மெட்டையும் அனுப்பியிருக்கிறார்கள். பாடலை வாசித்து நெகிழ்ந்துபோன சித், உடனடியாக வாய்ப்பைத் தவறவிடக்கூடாதென கிளம்பி வந்துவிட்டார் என்கிறார்கள்.

ஏற்கெனவே, சைக்கோ படத்தில் ‘உன்ன நினைச்சு நினைச்சு’ பாடல் கூட கபிலன் வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில் பெரிய ஹிட்டானது. அந்தக் கூட்டணியில் மீண்டும் ஒரு மேஜிக்கல் மொமன்ட்டாக இந்தப் பாடலும் இருக்கும் எனப் பாடலைக் கேட்டவர்கள் கூறுகிறார்கள்.

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

திங்கள் 11 ஜன 2021