மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

ஏ...வாட்ஸ் அப்பே: அப்டேட் குமாரு

ஏ...வாட்ஸ் அப்பே: அப்டேட் குமாரு

வாட்ஸப்புல இனிமே பாதுகாப்பு இல்லையாம். அதனால நான் அதுலேர்ந்து மாறப் போறேன்...சிக்னல்,டெலிகிராமுக்கு வந்துடுனு ஃப்ரண்ட் வாட்ஸ் அப்புலயே மெசேஜ் அனுப்புறான் ஃப்ரண்ட். நாமனு இல்ல உலகத்துல எல்லாருமே இப்படித்தான்... நல்லா பழகிக்கிட்டே இருப்பாங்க. நம்ம ரகசியத்தை லீக் பண்றான்னு தெரிஞ்சதும் கழட்டிவிடத்தான் செய்வாங்க. டிக்டாக்கை நாம கழட்டிவிடலையா? சீனா வேவு பார்த்தா தப்பு, அமெரிக்கா வேவு பாத்தா சரியா? இன்னும் யாரும், ‘ஏ... வாட்ஸ் அப்பே’னு கவிதை எழுதலையா ப்ரோ...

நீங்க அப்டேட் பாருங்க

amudu

வருடம் முழுவதும் வச்சு செஞ்சுட்டு, திருமண நாளன்று மட்டும் கணவருக்கு ராஜமரியாதை தரும் மனைவியைப் போல தான், ஆட்சியர்கள் தேர்தல் சமயத்தில் மக்களுக்கு மரியாதை தருவது.

ரஹீம் கஸ்ஸாலி

பொங்கல் பானைல எப்படி தீப்பிடிச்சது?

பொங்கலுக்கு பதில் பஞ்சை வைச்சு சமைச்சோம். தீப்பொறிபட்டுடுச்சு.

mohanram.ko

வாட்ஸ்அப் பாதுகாப்பு இல்லையாம்

உன் வாட்ஸ்அப்ப உன் மனைவி பார்த்தா, உனக்கே பாதுகாப்பு இல்லை, போவியா...

balebalu

செவ்வாய் கிரகத்தில் நகரம் அமைப்பேன் - எலான் மஸ்க்

ஏற்கனவே கொரோனா பைசா செலவு இல்லாமல் எல்லாரையும் மேல் உலகுக்கு அனுப்பி கொண்டிருக்கிறது ! அதுக்கு ஏதாவது உருப்படியா கண்டுபிடிங்க தலைவரே !

ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 𝕣𝕒𝕛𝕒

பஞ்சுப் பொங்கல், மஞ்சள் தூளை அம்மில கொட்டி அரைக்கிறது, அரிசியில்லாம ஆட்டுகல்லுல ஆட்டுறதுன்னு எல்லாமே சினிமா செட்டப்பா இருக்கிறப்பவே தெரிய வேணாமா.. பாஜகவுல நடிகர்களா ஏன் சேர்(த்)ந்தாங்கன்னு!

நாகராஜ சோழன் MA.MLA

புதுவையைக் காப்பாற்ற, மீட்க எந்தவித தியாகமும் செய்யத் தயார்!- நாராயணசாமி.

அதற்கும் நான் தடை போடுவேன்.

இப்படிக்கு கிரன் பேடி

ச ப் பா ணி

மெளன விரதத்தில்

மொபைல் போன்

"silent mode"!

mohanram.ko

வாட்ஸ்அப் பாதுகாப்பு இல்லையாம்

உன் வாட்ஸ்அப்ப உன் மனைவி பார்த்தா, உனக்கே பாதுகாப்பு இல்லை, போவியா...

மயக்குநன்

பாஜக பொங்கல் விழா எப்படி போச்சு கோபி..?

பாஜகங்கிற பஞ்சும், மீம்ஸ் கிரியேட்டர்ஸ்ங்கிற நெருப்பும் பத்திக்கிச்சு ரமேஷ்..!

கோழியின் கிறுக்கல்!!

அநேகமாக இவங்க Covid Warriorsஐ வச்சு தான் Vaccineனோட மூன்றாம் கட்ட ஆய்வையே நடத்தப் போறாங்கன்னு நினைக்கிறேன்!!

-லாக் ஆப்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

திங்கள் 11 ஜன 2021