மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் டீஸர் !

விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் டீஸர் !

விஜய்சேதுபதி , பார்த்திபன் நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் டீஸர் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் 'துக்ளக் தர்பார்'. நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு, மீண்டும் விஜய்சேதுபதி - பார்த்திபன் கூட்டணியில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் இரண்டு பேருக்குமே சமமான கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீஸர் வீடியோ சன் டிவியின் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் இப்படம் உருவாகியிருக்கிறது. ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணியாற்றிவருகிறார்கள்.

விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்த ரிலீஸ் விஜய்யுடன் நடித்திருக்கும் மாஸ்டர். இப்படம், வருகிற ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகிறது. அதோடு, கடைசி விவசாயி, நவரசா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், லால் சிங் சந்தா, துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், மும்பைக்கர், தெலுங்கு படம் ஒன்று, மலையாளப் படம் ஒன்று ஆகியப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். எப்படியும், இந்த வருடம் விஜய்சேதுபதிக்கு ஐந்து படங்களாவது வெளியாகிவிடும் என்கிறார்கள். அதில் ஒன்றாக, துக்ளக் தர்பாரும் இருக்கும். இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, படத்தை எதிர்பார்க்கலாம்.

-ஆதினி

மகேஷ் பாபுக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

மகேஷ் பாபுக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

திரைக்கு வரும் ஆன்டி இண்டியன்!

9 நிமிட வாசிப்பு

திரைக்கு வரும் ஆன்டி இண்டியன்!

திங்கள் 11 ஜன 2021