மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

ஃபேவரைட் நடிகைகளின் அடுத்த படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்!

ஃபேவரைட் நடிகைகளின் அடுத்த படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்!

கொரோனா அச்சுறுத்தலினால் கடந்த வருடம் படங்கள் பெரிதாக வெளியாகவில்லை. விரல் விட்டு எண்ணிவிடும் அளவே படங்களும் வெளியானது. அதனால், இந்த வருடம் எக்கச்சக்கப் படங்கள் தயாராகி வருகின்றன. ஏற்கெனவே முடிந்துவிட்ட படங்களும் ரிலீஸுக்கானத் தருணத்துக்குக் காத்திருக்கின்றன. நடிகர்களுக்கு இணையாக நாயகிகளும் அதிக திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள் நிறையவே உருவாகிவரும் சூழலில், இந்த வருடம், ஹீரோயின்களுக்கு என்னென்ன படங்கள் லைன் அப்பில் இருக்கின்றன என்கிற பட்டியலே இது.

நயன்தாரா

கொரிய மொழியில் வந்த ‘Blind’ படத்தின் தமிழ் ரீமேக் 'நெற்றிக்கண்'. அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ்தான் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். நயன்தாராவுக்கு இந்த வருடத்தில் தமிழ் ரிலீஸாக 'நெற்றிக்கண்' வரும் என எதிர்பார்க்கலாம். ரஜினியுடன் 'அண்ணாத்த' படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும் நடிக்கிறார். இந்த இரண்டு படமும் சீக்கிரம் முடிந்து, ரிலீஸுக்குத் தயாராகிவிடும். மலையாளத்தில் நயன் நடித்திருக்கும் 'நிழல்' போஸ்ட் புரொடக்‌ஷனிலும், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஃபகத் பாசில் உடன் நடிக்கும் 'பாட்டு' ப்ரீ புரொடக்‌ஷனிலும் இருக்கிறது.

த்ரிஷா

த்ரிஷாவுக்கு கைமேல் ரிலீஸுக்குத் தயாராக நான்கு படங்கள் இருக்கின்றன. கே.திருஞானம் இயக்கத்தில் 'பரமபத விளையாட்டு', சுந்தர் பாலு இயக்கத்தில் 'கர்ஜனை', சரவணன் இயக்கத்தில் 'ராங்கி', அரவிந்த் சுவாமி உடன் நடித்திருக்கும் 'சதுரங்க வேட்டை'. மோகன் லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாக இருந்த 'ராம்' லாக் டவுன் காரணமாக நின்றது. இடையில் அதே காம்பினேஷனில் 'த்ரிஷ்யம் 2' எடுத்து முடித்துவிட்டார்கள். இப்போது மறுபடி ராம் படம் சீக்கிரமே தொடங்க இருக்கிறது. அதில் த்ரிஷாதான் ஹீரோயின். இதுபோக சுமந்த் ராதாகிருஷ்ணன் டைரக்‌ஷனில் த்ரிஷாவும் சிம்ரனும் நடிக்கும் பட அறிவிப்பும் வந்திருக்கிறது.

சமந்தா

சமந்தா நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராக இருப்பது அமேசான் பிரைமில் வரும் ‘ஃபேமிலி மேன் 2’ வெப்சீரிஸ். இதன்பிறகு, 'காத்து வாக்குல ரெண்டு காதல்', அஸ்வின் சரவணன் டைரக்‌ஷனில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். இதுமட்டுமல்லாமல், தெலுங்கில் 'ஒக்கடு', 'அர்ஜூன்' படங்களை இயக்கிய குணசேகர் இயக்கத்தில் இந்திய சினிமாவாக உருவாகும் 'சகுந்தலம்' எனும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

ரெஜினா

ரெஜினா கசன்ட்ரா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை', 'பார்ட்டி' படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. விஷாலுடன் நடித்த 'சக்ரா' படம் ரிலீஸுக்கு ரெடி. அதன்பிறகு ராஜபாண்டி இயக்கத்தில் 'கள்ளபார்ட்', ஆந்தாலஜியாக உருவாகியிருக்கும் 'கசட தபற' படங்களும் லைனில் இருக்கிறது. இப்போதைக்கு கார்த்திக் ராஜு டைரக்‌ஷனில் 'சூர்ப்பனகை' படத்தில் நடித்துவருகிறார் ரெஜி.

ஆண்ட்ரியா

மாஸ்டருக்கு முன்னாலேயே சில படங்கள் நடித்து. அதனுடைய ரிலீஸுக்கு வெயிட்டிங்கில் இருக்கிறார் ஆண்ட்ரியா. அழகு கார்த்திக் இயக்கத்தில் 'நோ என்ட்ரி', தில் சத்யா இயக்கத்தில் மாளிகை, நாஞ்சில் டைரக்ட் பண்ணும் 'கா', இவைதான் அந்தப் படங்கள் . இறுதியாக, அரண்மனை 3, பிசாசு 2 படங்களிலும் நடித்துவருகிறார்.

காஜல் அகர்வால்

காஜல் நடித்து நீண்ட நாளாக ரிலீஸுக்குக் காத்திருக்கும் தமிழ் படம் 'பாரீஸ் பாரீஸ்'. இந்தியில் வெளியான குயின் படத்தின் ரீமேக் தான் இது. அதோடு, சமீபத்தில் ஷூட் முடிந்திருக்கும் படம் 'ஹே சினாமிகா'. இது தவிர தெலுங்கில் 'மோசகிருக்கல்லு', இந்தியில் 'மும்பை சாகா' படங்களும் உருவாகிவருகிறது. இதுபோக இந்தியன் 2-விலும் நடிக்க இருக்கிறார்.

ப்ரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஹீரோயின் ப்ரியா பவானி சங்கர் தான். அவர் நடித்து ரெடியாக இருக்கும் படங்கள், அதர்வா உடன் நடித்திருக்கும் 'குருதி ஆட்டம்', ராதா மோகன் டைரக்‌ஷனில் நடித்திருக்கும் 'பொம்மை'. அதோடு, பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஓ மணப்பெண்ணே' தயாராகிவருகிறது. இது போக சிம்புவுடன் 'பத்து தல', ராகவா லாரன்ஸோடு 'ருத்ரன்' படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்

கிட்டத்தட்ட தெலுங்கு ஹீரோயினாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். ஏற்கெனவே தெலுங்கில் நடித்த மகாநடி பெரிய ஹிட். அடுத்து மிஸ் இந்தியா படமும் தெலுங்கில் வந்தது. இப்போது, 'குட் லக் சகி', 'ரங் தே' படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. மலையாளத்தில் 'மரக்கார்' படத்தில் நடித்துவருகிறார். அதுவும் ரிலீஸாக இருக்கிறது. இதற்கடுத்து, தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' மற்றும் செல்வராகவனுடன் நடிக்கும் 'சாணிக் காகிதம்' படங்கள் லிஸ்டில் இருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு க/பெ.ரணசிங்கம் கொடுத்த எனர்ஜியினால், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். ரிதேந்திர பிரசாத் இயக்கத்தில் 'பூமிகா', விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 'திட்டம் இரண்டு' படங்களின் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. தெலுங்கில் நானியுடன் 'டக் ஜெகதீஷ்' படத்திலும் நடித்துவருகிறார். இவை மட்டுமல்லாமல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'வேதாளம் சொல்லும் கதை', 'துருவநட்சத்திரம்' படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

திங்கள் 11 ஜன 2021