மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

மாஸ்டர், ஈஸ்வரன்: ரிலீஸ் திட்டம் இதுதான்!

மாஸ்டர், ஈஸ்வரன்: ரிலீஸ் திட்டம் இதுதான்!

தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ரிலீஸ் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கல் தின சிறப்பாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஈஸ்வரன். கொரோனா லாக்டவுன் காலத்தில் 28 நாட்களுக்குள் படத்தை முடிந்து, பொங்கல் ரேஸூக்கு வந்துவிட்டது. தமன் இசையில், சென்சாரில் யு சான்றுடன் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டரும், ஈஸ்வரனும் தைரியமாக ஒரே நேரத்தில் வெளியாக , அரசு அறிவித்த 100% அனுமதியே காரணம். ஆனால், மீண்டும் 50 % இருக்கையுடனே திரையரங்கில் படங்கள் வெளியாகும் எனும் செய்தி பட ரிலீஸில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகுமா எனும் சந்தேகம் எழுந்தது. அதனால், ரிலீஸ் குறித்து விசாரித்தால் புதிய தகவல் கிடைத்தது.

ஒரு பக்கம் மாஸ்டர் ரிலீஸில் எந்தக் குழப்பமும் இல்லை. சொன்ன படி, ஜனவரி 13ஆம் தேதி வெளியாகிறது. இன்னொரு பக்கம் ஈஸ்வரன் தரப்பிடம் சமீபத்தில் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. என்னவென்றால், முதல் கட்டமாக ஜனவரி 13 முதல் 27 வரை மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடுவது, அதன்பிறகு, ஜனவரி 28 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை ஈஸ்வரன் வெளியிடலாம். அப்படி வெளியானால் படத்துக்கு 800 திரையரங்குகள் வரை தரப்படும் என்று சொல்லியிருக்கிறது திரையரங்க தரப்பு. இந்த திட்டத்தை நிராகரித்துவிட்டார் சிம்பு என்றே தெரிகிறது. அதோடு, பொங்கல் ரிலீஸில் உறுதியாக இருக்கிறாராம் சிம்பு.

இறுதியாக வேறு ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கிறது. சொன்னபடி, விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் முதல் நாளில் 900 திரையரங்குகளில் வெளியாகிறது. அடுத்த நாள் சிம்பு படத்துக்கு 360 திரையரங்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்வரன் வெளியாவதால், அடுத்தடுத்த நாட்களில் 700 திரையரங்குகளுக்கு மாஸ்டர் குறையும். இதுதான் இப்போதைக்கு திட்டம். இப்படி, சுலபமாகப் படங்களை பங்கிட்டு வெளியிடும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள் திரையரங்கத்தினர். இந்த முடிவினால், பெரிதாக எந்தச் சிக்கலும் இல்லாமல் இரண்டு படங்களுமே பட்ஜெட்டுக்கேற்ற சமமான வசூலைப் பெறும் என்கிறார்கள்.

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

சனி 9 ஜன 2021