மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

முனுசாமிண்ணே தேசியக் கட்சின்னா என்னண்ணே...: அப்டேட் குமாரு

முனுசாமிண்ணே தேசியக் கட்சின்னா என்னண்ணே...: அப்டேட் குமாரு

ஒவ்வொரு குரூப்லையும் வம்பு வளர்க்குறதுக்குன்னே தாட்டியமா ஒரு ஆளை வளர்த்து வச்சிருப்பாங்கள்ல. இப்ப அந்த முறை கேபி முனுசாமி அண்ணனுக்கு. மைக்கைப் புடிச்சார்னா எதிரிகளை கடிச்சுக் குதறி துப்பித் தொங்க விட்டுருவாரு. என்ன ஒரே ஒரு டவுட்டுன்னா முனுசாமிண்ணே... நீங்க சொல்ற தேசியக் கட்சின்னா எது? இம்புட்டு தைரியமா கம்பு சுத்துற நீங்க அந்த தேசியக் கட்சி பேரைச் சொன்னா நாங்கள்லாம் தெரிஞ்சுக்க ஏதுவா இருக்கும்ல. அதனால அடுத்த முறை பேசும்போது தேசியக் கட்சி பேரை கொஞ்சம் சேர்த்து சொல்லுங்கண்ணே....உங்க காதுக்கு ஒரு தாமரப் பூ பரிசா தர்றோம்

நீங்க அப்டேட் பாருங்க

amudu

வேளாண் சட்டங்களின் நோக்கத்தை விவசாயிகள் புரிந்து கொள்வார்கள். -அமைச்சர் தோமர்.

நோக்கத்தை புரிந்து கொண்டதால் தான் போராட்டமே பண்றாங்க.

ரஹீம் கஸ்ஸாலி

எடப்பாடியார்- தீரன் சின்னமலை; ஓ.பி.எஸ் - பூலித்தேவன்!

- அதிமுக இலக்கிய அணி செயலாளர் வளர்மதி #

தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கனாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் - பொள்ளாச்சி ஜெயராமன். #

சபாஷ்.... சரியான போட்டி

ஊர்க்காவலன்

எத்தனை கூர்மையாக இருந்தாலும் ஒரு ஆணியால் சுவற்றில் தானாக இறங்க முடியாது.. சுத்தியலால் தலையில் தட்டிக்கொடுக்கப்பட வேண்டும்...

ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 𝕣𝕒𝕛𝕒

கமல் தேர்தல் பிரச்சார செய்திகளையும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் பார்த்துட்டு எங்க பாட்டி கேட்குது ஆரி என்ன எம்ஜிஆரா ஓட்டு கேட்டு வராருன்னு.

அய்யோ பாட்டீ...!

செங்காந்தள்

கூண்டோடு கைலாசம் போனது நித்தியானந்தா தான்...!!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

சிங்கப்பூர் பிரதமர் லீ, மக்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

ஜி : அய்யோ அங்க பார்த்துட்டு அப்படியே திரும்பி நம்மை பார்க்கறாங்களே..

மயக்குநன்

ஏழை, எளிய மக்களுக்காக உழைக்கிற ஒரே அரசு அதிமுக அரசுதான்!- முதல்வர் பழனிசாமி.

'ஏழைத்தாயின் மகனுக்காக' உழைக்குற அரசுன்னு சொல்லுங்க..!

லாக் ஆப்

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சனி 9 ஜன 2021