மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

மாஸ்டர் தயாரிப்பாளரின் புதிய மன மாற்றம் : மறுபடியும் முதல்ல இருந்தா?

மாஸ்டர் தயாரிப்பாளரின் புதிய மன மாற்றம் : மறுபடியும் முதல்ல இருந்தா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா மற்றும் யூடியூப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அனிருத் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

வானிலை நிலவரம் போல, ஒவ்வொரு நாளும் மாஸ்டர் படத்தின் செய்திகள் புதிது புதிதாக வந்துகொண்டே இருக்கிறது. படம் வெளியாகும் வரை அவை தவிர்க்க முடியாத ஒன்று தான். அதோடு, மாஸ்டர் டீமும் படத்திலிருந்து டிரெய்லரை விடவில்லை என்றாலும், எக்கச்சக்கமாக புரோமோ வீடியோக்களை போட்டு மெர்சல் செய்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், மாஸ்டர் டீமுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தியாகிவிட்டது, 50 % மட்டுமே இருக்கை அனுமதி. தமிழக அரசு 100% இருக்கைக்கு முதலில் அனுமதி அளித்திருந்தது. அதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் பட ரிலீஸை உறுதி செய்தது மாஸ்டர் டீம். ஆனால், மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில் மீண்டும் ஐம்பது சதவிகிதம் மட்டுமே திரையரங்க இருக்கைகளை நிரப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது அரசு தரப்பு. இதனால், மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் மிகுந்த அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

திரையரங்கில் கண்டிப்பாக வெளியிடணுமா என்ன? என்று யோசித்திருக்கிறார். அதோடு, ஓடிடி தளத்தில் வெளியிட்டு விடவும் திட்டமிட்டிருக்கிறார். அதனால், மீண்டும் ஓடிடியிடம் ரிலீஸூக்காகப் பேசியிருக்கிறார். ஆரம்பத்தில், சொன்ன விலையை விட 20 கோடி ரூபாய் குறைத்து கேட்டது ஓடிடி தளமான பிரைம் . அதனால் தான் ஓடிடி ரிலீஸூக்கு நோ சொன்னார் லலித். இப்போது, சொன்ன 20 கோடியையும் சேர்த்துத் தரவும் தயாராக இருக்கிறதாம் பிரைம் நிறுவனம். சரி, வெளியிட்டு விடுவோமா என்று யோசிக்கும் போது, புது கண்டிஷனைப் போட்டிருக்கிறது.

பிரைம் வீடியோவுக்கென சில விதிமுறைகள் இருக்கிறதாம். வரிசைப் படியே படங்களை ரிலீஸ் செய்வார்களாம். அதனால், படத்தை வாங்கினாலும் ஒன்றரை மாதம் கழித்தே வெளியிடுவோம். சம்மதமா என்று கேட்டிருக்கிறது. பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதே லலித் எண்ணம். பின்வாங்க முடியாது என்பதால், ஓடிடி வேண்டாம் என்ற முடிவுக்கு மீண்டும் வந்திருக்கிறார்.

திரையரங்கில் 50% என்றாலும் ஓகே, பணம் நஷ்டமானாலும் ஓகே தியேட்டரிலேயே வெளியிட்டு விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். தமிழகத்தில் சில ஏரியாக்களில் நேரடியாக படத்தை ரிலீஸூம் செய்ய இருக்கிறார் லலித். சிறப்புக் காட்சிகள் ஆகியவற்றை மனதில் கொண்டு வசூலை திட்டமிட்டும் வருகிறார். எப்படியும் 900 திரையரங்கில் மாஸ்டர் ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த களேபரம் ஒரு பக்கம் இருக்க, சைலண்டாக ஹைதராபாத் கிளம்பிவிட்டாராம் இயக்குநர் லோகேஷ். என்னவென்று விசாரித்தால், படத்துக்கான மிக்ஸிங் பணிகள் அங்கு போய்க் கொண்டிருக்கிறதாம். எடிட்டர் பிலோமின் ராஜூம் உடன் இருக்கிறார். கைதி படத்திற்குப் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞரே, இதற்கும் பணியாற்றி வருகிறார்.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

சனி 9 ஜன 2021