மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

தனுஷை வம்புக்கு இழுக்கும் சிம்பு

தனுஷை வம்புக்கு இழுக்கும் சிம்பு

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்துக் கதைக்களத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். சென்சாரில் யு சான்றிதழுடன் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சிம்புவுடன் நித்தி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு, வெறும் 28 நாட்களுக்குள் திண்டுக்கல் பகுதியில் படப்பிடிப்பை முடித்து, படத்தையும் தயார் செய்துவிட்டது படக்குழு.

தமன் இசையில் தமிழன் பாடல் செம வைரல். சிம்பு உடல் எடைக் குறைத்து புது கெட்டப்பில், ஈஸ்வரன் படத்தில் இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், விக்ரம் - சூர்யா வரிசையில் சிம்பு - தனுஷ் என்று தான் தமிழ் சினிமாவில் சொல்லப்படும். நடுவில் சிம்பு சத்தமே காட்டாததால் தனுஷ் சோலோவாக இருந்தார். பொதுவாக, பெரிய ஹீரோக்களின் படங்களில், போட்டி நடிகர்களின் வசனத்தை சாடும் மாதிரியான பதில் வசனங்கள் இருக்கும். அப்படியாக, தனுஷை வம்புக்கு இழுத்திருக்கிறார் சிம்பு.

ஈஸ்வரன் டிரெய்லரில் வில்லனிடம் பேசும்போது, ‘நீ அழிக்கறதுக்காக வந்திருக்க அசுரன்னா... நான் காக்கறதுக்காக வந்திருக்க ஈஸ்வரன்டா..’ எனும் வசனம் இப்படி இருக்கும். இதனால், தனுஷ், சிம்புவுக்குள் சண்டை என்றெல்லாம் கிடையாது. ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இந்த மாதிரியான வசனங்களை இயக்குநர்கள் எழுதுவது வழக்கம். கொஞ்ச நாளாக தனுஷ் - சிம்பு படங்களில் அது இல்லாமல் இருந்தது. தற்பொழுது மீண்டும் துவங்கியிருக்கிறது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

வெள்ளி 8 ஜன 2021