மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

யாருக்குதான் முதல்ல ஊசி போடுறது: அப்டேட் குமாரு

யாருக்குதான் முதல்ல ஊசி போடுறது: அப்டேட் குமாரு

கொரோனா தடுப்பூசிய கண்டுபுடிச்சி ஊசியையும் போட தொடங்கிடுச்சு கவர்ன்மென்ட்டு. ஆனா சோதனையே முடியல... அதுக்குள்ள ஊசிய போடப்போறீங்களான்னு கேள்வி மேல் கேள்வி வந்துகிட்டு இருக்கு. முதல்ல அமைச்சரவையில இருக்குற எல்லாரும் ஊசி போடுங்கன்னு சொன்னாரு மதுர எம்.பி வெங்கடேசன். இப்ப அவங்ககூட லாலு கட்சியும் சேந்துகிச்சு. பிரதமர் முதல்ல ஊசி போட்டுக்கட்டும், அப்புறம் மக்களுக்கு ஊசி போடுங்கன்னு சொல்றாரு லாலு மகன் தேஜ் பிரதாப். யாருக்குத்தான் முதல்ல ஊசி போடுவாங்க...

நீங்க அப்டேட்ட பாருங்க...

நெல்லை அண்ணாச்சி

தமிழகத்திற்கு அளவில்லாமல்

மோடி செய்துள்ளார்!- ...

...L.முருகன்.

ஆமா...ஆமா

" வச்சி " செஞ்சிருக்கார்..!!

நாகராஜ சோழன் MA.MLA

பாஜக சார்பில் ‘நம்ம ஊர் பொங்கல்’ - எல்.முருகன்

ஆட்சிக்கு வந்து ஆறு வருசமா எங்க வாழ்கையில் வெடி வெச்சு நீங்க தீபாவளி கொண்டாடியது பத்தளையா??

balebalu

இப்படியெல்லாம் நடக்கும் னு தெரிஞ்சுதான் நம்ம ஊர்ல எலக்ஷன் முடிஞ்சா உடனே பதவி ஏற்பு விழா நடத்திடறாங்க ! மாச கணக்கா தள்ளி வெச்சா குழாயடி சண்டை தான் !

USCapitol

நா இரவீந்திரன்

வெள்ளை முடி வருதுன்னு டை அடிச்சா முடி கொட்டுது, முடி கொட்டுதுன்னு ஃபீல் பண்ணா வெள்ளை முடி வருது, 'முடி'யல..!

மயக்குநன்

தமிழக மக்கள் அனைத்தையும் 'எடைபோட்டுப் பார்த்து', யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள்!- முதல்வர் பழனிசாமி.

ஓகோ... அதான் ரேஷன் கடை மூலமா 'பொங்கல் பரிசை' வழங்கறீங்களா தலைவரே..?!

சுனா.பானா

வயசு கூடமா இருக்கறது ஓகே, ஆபிஸ்ல எக்ஸ்பீரியன்ஸ் கூடும்ல? இல்லனா ஒரே சம்பளத்துக்கு 10 வருஷம் வேலை செய்யணும்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..

நேத்து தான் பொறந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள ஒரு வாரம் ஓடிப்போயிருச்சு..

குழந்தையா மாப்ள..?

குழந்தையா..? புது வருசம் மாமா..

மயக்குநன்

அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என்பதற்கு நானே சாட்சி!- முதல்வர் பழனிசாமி.

சாதாரண சாட்சி இல்லை, கூவத்தூர் சாட்சி..!

லாக் ஆப்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வெள்ளி 8 ஜன 2021