மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

2021: சிம்புவின் நான்கு படங்கள்!

2021: சிம்புவின் நான்கு படங்கள்!

நான்கு வருடத்துக்கு ஒரு படம் எனும் மொமண்டிலேயே இருந்தவர் சிம்பு. லீப் வருடத்தில் பிறந்த நாள் வருவது போல தான் சிம்பு ரசிகர்களின் நிலையும் இருந்துவந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். சிம்பு இப்போது நியூ சிம்புவாக அவதாரம் எடுத்திருக்கிறார். அடுத்தடுத்து படம் நடிப்பது என பிஸியாகிவிட்டார். இந்த வருடம் மட்டும் சிம்புவுக்கு நான்கு படங்கள் வெளியாக இருக்கிறது. என்னென்ன படங்கள், என்ன அப்டேட் ?!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஈஸ்வரன். கொரோனா லாக்டவுன் நேரத்தில் திண்டுக்கல் பகுதியில் ஒரே ஷெட்யூலில் 28 நாட்களுக்குள் எடுத்து முடிக்கப்பட்ட படம் ஈஸ்வரன். நித்தி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விடுமுறையின்றி முழு படத்தையும் முடித்துக் கொடுத்தார் சிம்பு. சென்சாரில் யு சான்றிதழுடன் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகிறது. ஒருவேளை திரையரங்க இருக்கைகள் அனுமதியில் குழப்பம் ஏற்பட்டால் கொஞ்சம் தள்ளிப்போகலாம். ஆனால், ஜனவரியில் ரிலீஸ் என்பது உறுதி.

சிம்பு நடிப்பில் தற்பொழுது தயாராகிவருவது மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இப்படம் தயாராகிவருகிறது. இரண்டு வருடத்துக்கு முன்பே துவங்க வேண்டியது, சிம்பு படப்பிடிப்புக்கு வராததால் துவங்காமல் போனது. கைவிடப்பட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, கடந்த வருட பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்கியது. சிம்புவே வந்தாலும், கொரோனா விடுவதாக இல்லை. படப்பிடிப்பு ரத்தானது. பிறகு, ஊரடங்கில் கொடுத்த தளர்வுக்குப் பிறகு படப்பிடிப்பு துவங்கியது. சமீபத்தில் நிவர் புயலின் போது, படக்குழு பாண்டிச்சேரியில் தான் மையம் கொண்டிருந்தது. புயலே வந்தாலும் பயப்பட மாட்டேன் என படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொடுத்தார் சிம்பு. இறுதிக் கட்டப் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் நடந்துவருகிறது. பிரம்மாண்ட மாநாடு செட்டில் படப்பிடிப்பு நடக்கிறது தற்போது க்ளைமேக்ஸ் சீன்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு படம் முடிந்துவிடும். மே மாதத்துக்குள் மாநாடு எதிர்பார்க்கலாம்.

மாநாடு படத்தை முடித்த கையோடு, அடுத்து துவங்க இருக்கும் படம் பத்துதல. சிவராஜ்குமார் நடித்த மஃப்டி எனும் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் இது. ஒரிஜினல் வெர்ஷனின் இயக்குநரே இயக்கிவந்தார். அப்போது, சொல்லிக் கொள்ளாமல் பாதியிலேயே ஷூட்டிங்கிலிருந்து கிளம்பிவிட்டார் சிம்பு. இப்போது தான், மிகப்பெரிய சேஞ்ச் ஓவர் காட்டி தமிழ் சினிமாவையே ஆச்சர்யப்பட வைத்துக் கொண்டிருக்கும் சிம்பு, பத்து தல டீமையும் ஆச்சரியப்படுத்தினார். மீண்டும் படத்தை துவங்க சம்மதம் தெரிவித்தார். ஆனால், இயக்குநரை மற்றும் மாற்றியிருக்கிறது படக்குழு. `ஜில்லு ஒரு காதல்', `நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறுகிறார்கள். படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக் நடித்துவருகிறார். விரைவிலேயே ஷுட்டிங் துவங்குகிறது. இந்த வருட ரிலீஸாக இந்தப் படமும் இருக்கும்.

நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகிவருகிறது 'மஹா'. ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை மதியழகன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் சிம்பு நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பின் போது தான் கொரோனா பரவ துவங்கியது. தற்பொழுது படப்பிடிப்பை முடித்துவிட்டனர். ஜிப்ரான் இசையில் படத்துக்கான பாடல் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட இருக்கிறது படக்குழு.

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

3 நிமிட வாசிப்பு

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வெள்ளி 8 ஜன 2021