மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

சொன்ன நேரத்துக்கு முன்பாக ரிலீஸான கே.ஜி.எஃப் 2 டீஸர்!

சொன்ன நேரத்துக்கு முன்பாக ரிலீஸான கே.ஜி.எஃப் 2 டீஸர்!

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திடீரென வெளியாகியிருக்கிறது கே.ஜி.எஃப் 2 டீஸர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். இதன் இரண்டாவது பாகம் தற்போது தயாராகிவருகிறது. கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம், கொரோனாவினால் படப்பிடிப்பு நடத்துவது தாமதமானது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவருகிறது.

கே.ஜி.எஃப் சேப்டர் 2 எப்போது ரிலீஸ் என வெறித்தனமாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படத்தின் டீஸர் இன்று ஜனவரி 8ஆம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏனெனில், யஷ் பிறந்த தின ஸ்பெஷலாக டீஸரை வெளியிட வேண்டும் என்பதே படக்குழுவின் திட்டம். ஆனால், நேற்றிரவே டீஸர் வெளியாகிவிட்டது. இணையத்தில் வீடியோ லீக் ஆகிவிட்ட காரணத்தால், கட்டாயத்தின் பெயரில் டீஸரை வெளியிட்டு, பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பிரசாந்த் நீல்.

முதல் பாகத்தில் டிரெய்லருக்கு எப்படியான எதிர்பார்ப்பு இருந்ததோ, அதை விட பல மடங்கு எதிர்பார்ப்பை கூட்டிவிட்டது கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்துக்கான டீஸர்.

ஹீரோ யஷ் மற்றும் வில்லன் சஞ்சய் தத் இருவருக்குமான அறிமுக வீடியோவாக இந்த டீஸர் இருந்தது. நிச்சயமாக யஷ் ரசிகர்களுக்கு பவர்ஃபுல்லான பிறந்த நாள் சர்ப்ரைஸாக இது இருக்கும். ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எப்படியும், மே மாதத்துக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வெள்ளி 8 ஜன 2021