மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

சூதுகவ்வும் 2 : சத்யராஜ் ரோல் எப்படி இருக்கும் ?

சூதுகவ்வும் 2 : சத்யராஜ் ரோல் எப்படி இருக்கும் ?

தமிழ் சினிமாவில் மிக முக்கிய டிரெண்ட் செட்டிங் திரைப்படங்களில் ஒன்று சூதுகவ்வும். விஜய்சேதுபதியின் திரை வளர்ச்சியில் மிக முக்கிய இடம் இந்தப் படத்துக்கு உண்டு. 2013ஆம் ஆண்டு சின்ன பட்ஜெட்டில் உருவாகி, பெரிய வெற்றியைப் பெற்றது சூதுகவ்வும். நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

தனக்கென 5 கொள்கைகளை வைத்துக் கொண்டு சின்னச் சின்ன கடத்தல் வேலைகளைச் செய்து வருபவர் விஜய் சேதுபதி. அவருடன் இணையும் மூன்று நபர்கள். நான்குபேரும் ஒரு கட்டத்தில் அமைச்சரின் மகனை கடத்திவிட சூழல் தலைகீழாகிறது. ஹீரோயிசம் என்பதை வெளிப்படையாகக் காட்டாமல், பிஜிஎம், கருப்பு கண்ணாடி, போன்றவற்றைப் போட்டு நடக்க விட்டு ஹீரோயிசம் பண்ண வைத்திருப்பார் இயக்குநர் நலன். படத்தின் நிஜமான ஹீரோ இயக்குநர் தான். அவரது வசனங்கள் குறிப்பாக 'இதை இட்லினு சொன்னா சட்னிகூட நம்பாதுடா!' 'ஃப்ராடுத்தனம் பண்றதுக்கு குருட்டுத் தனமான முட்டாள்தனமும், முரட்டுத் தனமான புத்திசாலித்தனமும் வேணும்!', நயன்தாராவுக்குச் சிலைவைக்கும் சிம்ஹா போன்ற திரை சுவாரஸ்யங்களும் படத்தை வேறு தளத்துக்கு கொண்டு சென்றிருக்கும்.

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கில் `கட்டம் கேங்' என்கிற பெயரில் ராஜசேகர் நடிப்பில் வெளியானது. அதுபோல, உருதுமொழியில் சுப்பன் சுப்பி எனும் பெயரில் ரீமேக் ஆனது. எல்லா மொழிகளிலுமே வெற்றியடைந்த சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் தற்பொழுது உருவாகிவருகிறது.

இரண்டாம் பாகத்தை யங் மங் சங் பட இயக்குநர் எம்.எஸ்.அர்ஜூன் இயக்குகிறார். படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்க இருக்கிறது. முதல் பாகத்தை தயாரித்த சிவி குமாரே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார். விஜய்சேதுபதி ரோலில் சத்யராஜ் நடிக்கிறார். காளி வெங்கட், கருணாகரன் படத்தில் உடன் நடிக்கிறார்களாம். ஜிப்ரான் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார். அதோடு கூடுதல் தகவல் என்னவென்றால், படத்தில் சத்யராஜ் ரோல் என்ன என்பதை சீக்ரெட்டாக வைத்திருக்கிறதாம் படக்குழு. விஜய்சேதுபதி ரோல் மாதிரி, சத்யராஜ் ரோல் இருக்காது என்கிறார்கள். முதல் பாகத்தின் ஒன்லைனை எடுத்துக் கொண்டு, புதுக் கதையாக சூதுகவ்வும் 2 இருக்கும் என்று சொல்கிறார்கள்.

-ஆதினி

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

3 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

4 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

வெள்ளி 8 ஜன 2021