மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

உதவி இயக்குநரை கரம் பிடித்த கயல் ஆனந்தி

உதவி இயக்குநரை கரம் பிடித்த கயல் ஆனந்தி

பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அந்தப் படமே இவரின் அடையாளமாக மாற, கயல் ஆனந்தி என ரசிகர்களுக்குப் பரிட்சயமானார்.

'சண்டி வீரன்', 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'விசாரணை', 'ரூபாய்', 'என் ஆளோட செருப்பக் காணோம்', 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு' உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், ஜனவரி 7-ஆம் தேதி மாலை உதவி இயக்குநரான சாக்ரடீஸ் என்பவருடன் கயல் ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, தெலுங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் செண்டரில் இரவு 8 மணிக்கு இத்திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால், திரையுலகிலிருந்து மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

யார் இந்த சாக்ரடீஸ்? மூடர்கூடம் பட இயக்குநர் நவீனின் மைத்துனர். நவீனின் ‘அலாவுதீனும் அற்புத கேமரா’ மற்றும் அக்னிச்சிறகுகள் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிவருகிறார். அலாவுதீனும் அற்புத கேமராவில் நாயகியாக ஆனந்தி நடித்துள்ளார். இப்படப்பிடிப்பின் போது தான், இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தெரிகிறது. பின்னர், இரு வீட்டாரும் பேசி, இந்து முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

இந்த திருமண விழாவில் JSK சதீஸ் குமார் , அம்மா கிரியேஷன் சிவா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சிலர் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணமும் எளிமையான முறையில் நடந்து முடிந்திருக்கிறது.

தமிழில் அடுத்தடுத்து பல படங்களை லைன் அப்பில் வைத்திருக்கிறார் ஆனந்தி. 'அலாவுதீனின் அற்புத கேமரா', 'ஏஞ்சல்', 'இராவணக் கோட்டம்' உள்ளிட்ட படங்கள் ரிலீஸூக்கு ரெடியாகிவருகிறது. அதோடு, பரியேறும்பெருமாள் கூட்டணியான கதிர் மற்றும் ஆனந்தி இருவரும் மீண்டும் ஒரு த்ரில்லர் படத்திற்காக இணைய இருப்பதும் குறிப்பிடத்தக்கது. திரையுலக நண்பர்களுக்காக தனியாக ஒரு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை வருகிற பிப்ரவரி 01ஆம் தேதி நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 8 ஜன 2021