மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

மாஸ்டர், ஈஸ்வரன் ரிலீஸ் சிக்கல்... தீர்வு சொல்லும் முன்னோடிகள்!

மாஸ்டர், ஈஸ்வரன் ரிலீஸ் சிக்கல்... தீர்வு சொல்லும் முன்னோடிகள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் பொங்கல் தின சிறப்பாக ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஈஸ்வரன். கொரோனா லாக்டவுன் காலத்தில் 28 நாட்களுக்குள் படத்தை முடித்து, பொங்கல் ரேஸுக்கு வந்துவிட்ட படம் ஈஸ்வரன். தமன் இசையில், சென்சாரில் யு சான்றுடன் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக ஒரே காரணம், சமீபத்தில் வந்த அறிவிப்புதான். திரையரங்கில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்ததால், இரண்டு படங்கள் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. அந்த நம்பிக்கையில் இரண்டு படங்களுமே ரிலீஸ் பணிகளைத் தொடங்கியது. ஆனால், 100% அனுமதிக்கு மத்திய அரசு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு, பொதுநல வழக்கு ஒன்றும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாஸ்டர், ஈஸ்வரன் படக்குழுவினருக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.

50% இருக்கையுடன் இரண்டு படங்களும் வெளியானால், எந்தப் படத்துக்குமே சரியான வசூல் கிடைக்காது. வெளியாகியும் வீண் என்கிற நிலை ஏற்படும். ஆக, இந்தச் சிக்கலுக்கு என்ன தான் தீர்வு என்பது குறித்து திரையுலக அனுபவஸ்தர்களிடம் பேசினேன். என்ன கூறுகிறார்கள் என்றால், 100% என்பதில் இருந்து குறைந்து, 50% இருக்கை மட்டுமே அனுமதி என அறிவிப்பு வந்தால், திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றிணைந்து முதலில் ரிலீஸுக்கு அறிவித்த மாஸ்டர் படத்தை மட்டும் வெளியிடுவது என முடிவெடுக்கலாம் என்கிறார்கள்.

அதோடு, முதலில் மாஸ்டர் படத்துக்கு மட்டும் தியேட்டர் ஒதுக்குவது, இரண்டு வாரங்கள் கழித்து ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் செய்வது என திட்டமிடலாம். அப்படி ஈஸ்வரன் தள்ளி வெளியானால், அந்தப் படத்துக்கு ஒப்பந்தமான அளவிலிருந்து இரண்டு மடங்கு திரையரங்குகள் ஒதுக்குவது என முடிவெடுக்கலாம் என்கிறார்கள். முதலில் ஜனவரி 13 முதல் 27 வரை மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடுவது, அதன்பிறகு, ஜனவரி 28 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை ஈஸ்வரன் படத்துக்கு 800 திரையரங்குகள் வரை கொடுப்பது. திரையரங்க உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் ஒருங்கிணைந்து இப்படியான தீர்வை மேற்கொண்டால் திரையரங்கமும் செழிக்கும், திரைத்துறையும் வளரும் என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த திரையுலக முன்னோடிகள்.

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

வெள்ளி 8 ஜன 2021