மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

‘அந்தகன்‘ தலைப்பு வந்தது எப்படி? சுவாரஸ்ய பின்னணி!

‘அந்தகன்‘ தலைப்பு வந்தது எப்படி? சுவாரஸ்ய பின்னணி!

இந்தியில் ஆயுஷ்மான் குரானா , தபு நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அந்தாதூன். இந்தப் படத்தில் பார்வை சவால் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆயுஷ்மான். நெகட்டிவ் ரோலில் தபு நடித்திருப்பார். பெரிய வசூல் பெற்ற இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை தியாகராஜன் கைவசம் உள்ளது. இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘அந்தகன்’ என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு புத்தாண்டு அன்று வெளியானது. ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தை ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஃபெட்ரிக் இயக்குகிறார். ஆரம்பத்தில் மோகன் ராஜா இயக்க பேச்சுவார்த்தை நடந்தது கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தகன் என்பதற்குப் பொருள் பார்வையற்றவன் என்பதாகும். அதனால், இந்தப் பெயர் படத்துக்கு சரியான பொருத்தமாகியிருக்கிறது. ஆனால், இந்தப் பெயருக்குப் பின்னால் பெரிய போராட்டமே நடந்திருக்கிறது. மோகன்ராஜா ஒப்பந்தமாகியிருந்த நேரத்தில் ‘அதகளம்’ எனும் டைட்டிலை வைக்க முடிவெடுத்திருந்தார்கள். அதற்காக தியாகராஜன் போராடி, காசு கொடுத்து அந்த தலைப்பை வாங்கினார். பிறகு, இயக்குநரே மாறிவிட்டார்.

அதன்பிறகு ஒரு பாடல் வரியை தலைப்பாக வைக்க திட்டமிட்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர்.நடித்த உரிமைக்குரல் படத்தில் கண்ணதாசன் வரிகளில் வரும் ‘விழியே கதை எழுது’ வரியை, தலைப்பாக வைக்க நினைத்தார்கள். அதுவும் நடக்கவில்லை. இறுதியாக, ‘ப்ளாக் அண்ட் ஒய்ட்’ என தலைப்பை இறுதி செய்தார்கள். ஆனால், அதே பெயரில் ஒரு கன்னட திரைப்படம் தயாராகிவருகிறது. அந்தப் படம் தமிழிலும் வெளியாகிறதாம். அதனால், அவர்கள் தலைப்பை தரமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். இறுதியாக தான், அந்தகன் எனும் தலைப்பு உறுதியாகியிருக்கிறது.

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

3 நிமிட வாசிப்பு

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வியாழன் 7 ஜன 2021