பதினோரு மணிக் காத்தோட போயிரும்:அப்டேட் குமாரு

டீ குடிச்சிட்டு வர்றப்ப ஒரு பெரியவர் நின்னுக்கிட்டிருந்தாரு. என்னய்யா சௌக்கியமானு கேட்டேன். அவர் ஒரு காலத்துல ஒரு கழகத்துல மேடைப் பேச்சாளரா இருந்தவர். இப்ப பாவம் நொடிஞ்சு போயிருக்காரு. திடீர்னு என்னைப் பாத்ததும் சிரிச்சு பேசிக்கிட்டிருந்தார். ‘நல்ல வேளைப்பா... இந்த ஃபேஸ்புக், வாட்ச் அப் காலத்துல நான் பேச்சாளரா இல்ல. அன்னிக்கு பேசினதெல்லாம் இன்னிக்கு நான் பேசியிருந்தேன்னா.. ஒவ்வொரு நாளும் என் மேல கேஸ் போட்டுக்கிட்டே இருக்கணும். நல்ல வேளை எங்க காலத்துல எல்லாமே நைட் பதினோரு மணி காத்தோட போயிரும்’ அப்படினு நிம்மதிப் பெருமூச்சா சொன்னாரு.
அடப்பாவிகளா இப்படி ஒரு நிம்மதியா...நீங்க அப்டேட் பாருங்க.
amudu
தைப்பூச திருவிழாவிற்கு அரசு பொதுவிடுமுறை. -முதல்வர் பழனிச்சாமி.
பாஜக வேல் யாத்திரைக்கும், இதற்கும் சம்மந்தமில்லையே...
மித்ரன்
அது எப்படி திமிங்கலம் அவ்வளவு தூரம் இருக்குற அமெரிக்கா மட்டும் அவரு கண்ணுக்கு தெரியுது.. இங்க நம்ம நாட்டுல போராடுற விவசாயிகள் மட்டும் கண்ணுக்கு தெரில..?!
ரஹீம் கஸ்ஸாலி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அருளானந்தம் அதிமுகவிலிருந்து நீக்கம்.
இவ்வளவு நடந்த பிறகும், இவ்வளவு நாளா அவனை நீக்காமல் அந்தக்கட்சியில்தான் வச்சிருந்தீங்களா?
பர்வீன் யூனுஸ்
2020-க்கும் 2021-க்கும் என்ன வித்தியாசம்? # சென்ற ஆண்டு, பழைய கொரோனாவுடனும் இந்த ஆண்டு உருமாறிய கொரோனாவோடும் வாழ பழகி கொண்டது தான்.
நாகராஜ சோழன் MA.MLA
தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒரு கணினி வழங்கப்படும் - கமல்ஹாசன்
பிச்சை காரர்களுக்கு தான் இலவசம் தேவை அப்படின்னு சொன்னீங்களே கமல் அண்ணே!?!
கமல்~
அது 2018.. நடிகர் கமல்
இது 2021 ...அரசியல் வாதி கமல்
balebalu
Chennai - இனிமேல் 'தென்னகத்து சிரபுஞ்சி' என்று எல்லாராலும் அன்புடன் அழைக்கபடுவாய் !
ஹர்ஷாபா
வாரம் முழுவதும் ஆபிஸ்லில் துவைக்கிறார்கள்..
வார இறுதியில் வீட்டில் விடுபட்ட ஆறு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாய் துவைக்கிறார்கள்
சம்சாரிகளின் பரிதாபங்கள்.
mohanram.ko
இன்னும் 4 நாட்களுக்கு மழை - செய்தி
சென்னை டூ மழை - ஏய், நீ இன்னும் போகலையா...
உள்ளூராட்டக்காரன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும்
மொபைல் நோட்டிபிகேஷன் பார்க்கிறேன்
மயக்குநன்
தமிழகத்திற்கு கணக்கு சொல்ல முடியாத அளவிற்கு பிரதமர் மோடி செய்துள்ளார்!- எல்.முருகன்.
மதுவந்தி கணக்கா இருக்குமோ..?!
கோழியின் கிறுக்கல்!!
நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் பேசிகிறோமோ இல்லையோ,
கட்டாயம் ஒன்றுக்கும் உதவாத Selfie எடுத்துக் கொள்கிறோம்!