மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

மாஸ்டருக்கு கூடுதலாக 500 தியேட்டர்கள்... விஜய்க்கு முதன்முறையாக நடக்கும் ஆச்சரியம் !

மாஸ்டருக்கு கூடுதலாக 500 தியேட்டர்கள்... விஜய்க்கு முதன்முறையாக நடக்கும் ஆச்சரியம் !

அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு கதறிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் திரையுலகில் எங்கு திரும்பினாலும் மாஸ்டர் அப்டேட் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், கெளரி கிஷன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இசை அனிருத். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் படம் வெளியாகிறது. ஜனவரி 13ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கிலும், ஜனவரி 14ஆம் தேதி இந்தி மொழியிலும் வெளியாகிறது.

முதன்முறையாக விஜய் படம் நேரடியாக இந்தியில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்தியில் விஜய் தி மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. பாலிவுட்டில் மொத்தம் 500 திரைகளில் மாஸ்டர் வெளியாக இருக்கிறது. ராஜஸ்தான், டெல்லி, உத்திரப் பிரதேசம் மற்றும் கிழக்கு பஞ்சாப் பகுதிகளிலும் படம் வெளியாக இருக்கிறது.

தமிழகத்தில் ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இன்னும் எத்தனை திரைகளில் மாஸ்டர் வெளியாகிறது என்பது உறுதியாகவில்லை. சமீபத்தில், திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது அந்த அனுமதி ரத்து செய்யப்படலாம் என்று ஒரு பேச்சு நிலவுகிறது. அதனால், எத்தனை திரையரங்குகள் என்பது மட்டும் உறுதியாகாமல் இருக்கிறது.

மாஸ்டரின் ரிலீஸை வைத்து தான் தமிழ் திரையுலகை மீட்டு எடுக்கவேண்டும் என்று போராடி வருகிறார்கள். மாஸ்டர் ரிலீஸூக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ் பொறுத்து தான் மற்ற பெரிய ஹீரோக்களின் படங்களும் திரையரங்குக்கு வரும். இப்படியான சூழலில் பாலிவுட்டில் 500 திரைகளில் மாஸ்டர் வெளியாக இருப்பது ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வியாழன் 7 ஜன 2021