மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 ஜன 2021

நாளை சிட்னி டெஸ்ட்: நடராஜனுக்கு இடம் இல்லை!

நாளை சிட்னி டெஸ்ட்: நடராஜனுக்கு இடம் இல்லை!

சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரர் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நாளை (ஜனவரி 7) தொடங்குகிறது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் இன்று (ஜனவரி 6) வெளியிடப்பட்டது. காயத்திலிருந்து குணமடைந்த ரோகித் சர்மா, டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகச் சேர்க்கப்பட்டுள்ளார். நவ்தீப் சைனி அறிமுகமாகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அபாரமாக விளையாடிய தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள்... ரஹானே (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), சுப்மான் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பாண்ட், ஜடேஜா, அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், நவ்தீப் சைனி.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

புதன் 6 ஜன 2021