மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 ஜன 2021

AO 2 இப்போதைக்கு இல்லை.... செல்வா - தனுஷ் கூட்டணியில் துவங்கும் புதுப்படம்?

AO 2 இப்போதைக்கு இல்லை.... செல்வா - தனுஷ் கூட்டணியில் துவங்கும் புதுப்படம்?

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் படம் ‘ஜெகமே தந்திரம்’. திரையரங்கில் மட்டுமே வெளியிடுவோம் என வெறிகொண்டு காத்திருக்கிறது டீம்.

‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ மற்றும் அக்‌ஷய்குமாருடன் நடிக்கும் பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’ படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் தனுஷ்.  ஹாலிவுட் படமான ருஸ்ஸோ இயக்கத்தில் ‘க்ரே மேன்’ படத்திலும் தனுஷ் 43 படமான கார்த்திக் நரேன் படத்திலும் நடிக்க இருக்கிறார். இதற்கு நடுவே, சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் படம் நடிக்க தயாராகியும் வருகிறார் தனுஷ்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்துக்கான முதல்கட்டப் பணியாக போட்டோ ஷூட் வேலைகள் இன்று துவங்கியிருக்கிறது. இந்த ஷூட்டில் தனுஷ் கலந்துகொண்டிருக்கிறார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.

சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கான அறிவிப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி படு வைரலானது. போஸ்டரில் 2024 என மட்டுமே குறிப்பிட்டிருந்தது. ஆக, முதலில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை துவங்க இருக்கிறார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் வேறு ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அந்தப் படம் தான் முதலில் துவங்குகிறது.

அதுமட்டுமல்ல, ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கான இரண்டாம் பாகம் துவங்க வாய்ப்பே இல்லை என்றே சொல்கிறார்கள். அதோடு, 2024 என போஸ்டரில் குறிப்பிட்டிருந்தது ரிலீஸ் தேதி இல்லை. அப்படி படம் துவங்கினால், 2024ல் தான் துவங்கவே செய்யுமாம்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்த தயாரிப்பு தரப்பு, அதன்பிறகு படமே எடுக்கவில்லை. திரைத்துறையிலிருந்தே விலகியது. அப்படி இருக்கையில் டைட்டிலுக்கான உரிமையை அந்த நிறுவனத்திடமிருந்து தான் பெற வேண்டும். டைட்டிலை தர அவர்கள் தயாரா என்றும் தெரியவில்லை. இந்த சிக்கல் ஒரு பக்கமென்றால், படத்தை பெரிய பட்ஜெட்டில் இயக்க திட்டமிட்டிருக்காராம் செல்வா. ஆக, அதற்கு ஏற்ற தயாரிப்பு நிறுவனம் கிடைக்க வேண்டும். இந்த சிக்கலையெல்லாம் தாண்டி, ஆயிரத்தில் ஒருவன் 2 துவங்குவது எப்போது என்று தெரியவில்லை.

புதிதாக துவங்கும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா. புதுப்பேட்டை படத்தின் சீக்குவலாக இருக்கும் என்று முதலில் சொல்லப்பட்டது. அதுபோலவே, அதே கூட்டணியே தற்பொழுது இணைந்திருக்கிறது. எப்படியும், இந்தப் படம் குறித்த அறிவிப்பு வருகிற பொங்கல் அன்று வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

செவ்வாய் 5 ஜன 2021