மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 ஜன 2021

டாக்டர் படத்தை பார்த்த விஜய் ... நெகிழ்ச்சி சம்பவம்!

டாக்டர் படத்தை பார்த்த விஜய் ... நெகிழ்ச்சி சம்பவம்!

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் தின சிறப்பாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஜய் 65வது படத்தை நெல்சன் இயக்குகிறார்.

நெல்சனுக்கும் லோகேஷ் கனகராஜூக்கும் இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது. என்னவென்றால், மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவதாக ‘கைதி’ படத்தை கார்த்தி நடிக்க இயக்கிக் கொண்டிருக்கும் போது தான், விஜய்க்கு மாஸ்டர் படம் இயக்க ஒப்பந்தமானார். அதுபோல, கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் நெல்சனின் இரண்டாவது படமாக டாக்டர் உருவாகிவருகிறது. இந்த நேரத்தில் தான் விஜய் 65 படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. எப்படியும் படத்தை ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுவருகிறார்கள். இந்த நிலையில், படத்தை விஜய்க்கு போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர் நெல்சன். படத்தைப் பார்த்த விஜய்க்கு படம் மிகவும் பிடித்துவிட்டதாம். மகிழ்ச்சியுடன் பாராட்டியிருக்கிறார் விஜய்.

நெல்சனை நேரில் பாராட்டியதோடு இல்லாமல், சந்திக்கும் நபர்களிடமெல்லாம் டாக்டர் படம் நன்றாக வந்திருப்பதாகவும் கூறிக் கொண்டிருக்கிறாராம். இந்தத் தகவல் மீண்டும் நெல்சன் காதுக்கு போக, நெகிழ்ந்துபோய்விட்டார் நெல்சன். அதுமட்டுமல்ல, சிவகார்த்திகேயனுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகியிருக்கிறது இந்த விஷயம்.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க விஜய் 65 படத்தை விரைவில் இயக்க தயாராகி வருகிறார் இயக்குநர் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

செவ்வாய் 5 ஜன 2021