மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 ஜன 2021

ரிலாக்ஸ் டைம்: துளசி சூப்!

ரிலாக்ஸ் டைம்: துளசி சூப்!

குளிர்ச்சியும், ஈரப்பதமான சூழலும் கொண்ட குளிர்காலத்தில் ஈரப்பதமான காற்றை மனம் உற்சாகமாக வரவேற்றாலும் கூடவே அழையா விருந்தாளியாக காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக கைகோத்துக்கொண்டு வந்து நம்மை பாடாய்ப்படுத்தும். இத்தகைய நேரத்தில் தொண்டைக்கு இதமும், உடலுக்கு ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய இந்த துளசி மூலிகை சூப் செய்து ரிலாக்ஸ் டைமில் பருகலாம்.

எப்படி செய்வது?

நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி ஒரு கப், துளசி இலைகள் ஒரு கைப்பிடி, இடித்த இஞ்சி ஒரு துண்டு, பூண்டு சிறிதளவு, உப்பு தேவையான அளவு ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் சிறிது சுண்டியதும் இறக்கவும். பின்னர் அதை மசித்து வடிகட்டி, சிறிதளவு பொடித்த சீரகம், மிளகு சேர்த்துப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி சூடாகப் பருகவும்.

சிறப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

செவ்வாய் 5 ஜன 2021