மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஜன 2021

மாநகரம் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதியின் ரோல்!

மாநகரம் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதியின் ரோல்!

எந்த கேரக்டர் என்றாலும் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திர கேரக்டர் என எதுவென்றாலும் யோசிக்காமல் நடிக்கக் கூடியவர். பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர், மாஸ்டரில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார். ஓ மை கடவுளே, க/பெ.ரணசிங்கம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருவார். அதோடு, ஹீரோவாக டஜன் கணக்கில் படங்களையும் கையில் வைத்திருக்கிறார் சேதுபதி.

இந்த நிலையில் பாலிவுட்டில் படம் நடிக்கத் ரெடியாகி வருகிறார் விஜய் சேதுபதி. மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிமுகமான மாநகரம் படம், இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்துக்கு மும்பைகர் எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சேதுபதி.

படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க, விக்ராந்த் மெஸ்ஸி, சஞ்சய் மிஷ்ரா லீட் ரோலில் நடிக்கிறார்கள். இதில், மாநகரம் படத்தில் முனிஸ்காந்த் நடித்த ரோலில் தான், இந்தியில் விஜய் சேதுபதி நடிக்கிறாராம். தமிழில் முனிஸ்காந்த்துக்கு குறைவான காட்சிகளே இருக்கும். ஆனால், சேதுபதி நடிப்பதால் கொஞ்சம் காட்சிகள் அதிகப்படுத்துகிறார்களாம்.

கடைசி விவசாயி, நவரசா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், லால் சிங் சந்தா, துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், மும்பைக்கர், தெலுங்கு படம் ஒன்று, மலையாளப் படம் ஒன்று மற்றும் மாஸ்டர் ஆகிய படங்கள் விஜய் சேதுபதிக்கு லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

திங்கள் 4 ஜன 2021