மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஜன 2021

ஜோரா கை தட்டுங்க ஜொலிக்கும் விளக்கேந்துங்க: அப்டேட் குமாரு

ஜோரா கை தட்டுங்க ஜொலிக்கும் விளக்கேந்துங்க: அப்டேட் குமாரு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்ல உலகத்திலேயே சிறப்பா செயல்பட்ட பிரதமர் நம்ம மோடிதான்னு சொல்லியிருக்காங்களாம். இதை பிஜேபி தலைவர்கள்லாம் சொல்லிச் சொல்லி ஸ்டேட்டஸ் போட்டுக்கிட்டிருக்காங்க. நாமளும் இதுக்காக மோடிய பாராட்டியே ஆகணும். எல்லாரும் ஒருமுறை ஜோரா கைதட்டுங்க. அப்படியே ஒரு விளக்கேந்தி ஜொலிக்க வையுங்க... யாருங்க அது... புலம்பெயர் தொழிலாளர்களோட ஆவியா.. அடப் போப்பா அங்கிட்டு!

நீங்க அப்டேட் பாருங்க ஜி

ரஹீம் கஸ்ஸாலி

அவருக்கு பதில் இவர்ன்னு சீரியலில் மாற்றுவது போல, ரஜினிக்கு பதில் அழகிரின்னு இப்ப அவர் பின்னால் ஓட ஆரம்பித்துள்ளார்கள் திமுகவை பிடிக்காதவர்கள்.

நாகராஜ சோழன் MA.MLA

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

அப்பரமென்ன...

 எடப்பாடி பழனிச்சாமி க்கு திரையரங்கு காப்பாளர் அப்படின்னு பட்டம் குடுத்துட வேண்டியது தானே...

ℳsd↬இதயவன்↫

பாஜகவின் தமிழக தலைவர்கள் சிரிப்பு வெடி குண்டுகளை அவ்வப்போது வீசுபவர்கள் ~ ப.சிதம்பரம்

அதுல ஒன்னு தான் எச்ச.ராஜாவை அமைச்சர் ஆக்குவோம்னு சொன்னதா?!!

ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 𝕣𝕒𝕛𝕒

தமிழகத்தில் புத்தாண்டு மது விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.17 கோடி குறைவு!

வருவாங்க.. பொங்கலுக்கு 2500 கொடுத்துருக்கீங்கள்ல.. பொங்கலுக்கு வருவாங்க.

ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 𝕣𝕒𝕛𝕒

கோழி முட்டையும், பெட்ரோலும் ஒண்ணு, விலை நிர்ணயம் பண்ணும்போது.. எட்டுகாசு பத்துகாசுகள் அளவில்  ஆனா, விற்கும்போது ஒரு ரூபாயா ரவுண்ட்அப் பண்ணிடுறாங்க.

குடும்பஸ்தன்புலம்பல்கள்

mohanram.ko

டாஸ்மாக் - பெரிய ராஜா தேசிங்குனு நினைப்பு, பொங்கல் பரிசு 2500 வாங்கிட்டு போயிட முடியுமா?... மறுபடியும் இங்கே வந்துதானே ஆகணும்... வா.. வா..

தர்மஅடி தர்மலிங்கம்

'செஞ்சதை' சொல்லிக் காட்டும் போது தான் நமக்குள்ளும் ஒரு 'அரசியல்வாதி' இருப்பதே தெரியவருது!

உள்ளூராட்டக்காரன்

நாலு முட்டையை வாங்கி பைக்ல வச்சி எடுத்துட்டு வர்றதுக்குள்ள இப்போ உடையுமோ அப்போ உடையுமோனு பக்கு பக்குனு இருக்கு

இவங்கள காலம் பூரா உள்ளங்கைல வச்சி தாங்கணுமாமே

மயக்குநன்

அரசு கொடுக்கும் ரூ.2,500 டாஸ்மாக் மூலம் அரசுக்கே திரும்ப வந்துவிடும்!- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

இதுக்கு பெருமைப்படக் கூடாது... வெட்கப்படணும் சென்றாயன்..!

சரவணன். ℳ

"2021-ல் அதிமுக ஆட்சியமைத்ததும் கருணாநிதி மரணம் குறித்து விசாரணை"- ராஜன் செல்லப்பா

மொதல்ல உங்க அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லுங்கய்யா....

கோழியின் கிறுக்கல்!!

சொந்த வீடு, சொந்த கார் என்பதெல்லாம்,

கடனை அடைத்து பின்பே உண்மையாகின்றன!!

-லாக் ஆஃப்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

திங்கள் 4 ஜன 2021