மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

விஜய் சேதுபதிக்கு நெருக்கடி தரும் பார்த்திபன்

விஜய் சேதுபதிக்கு நெருக்கடி தரும் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. இந்த வருடம் விஜய் சேதுபதிக்கு எந்தப் படமும் வெளியாகாததால், இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே கையில் வைத்திருக்கிறார்.

கடைசி விவசாயி, நவரசா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், லால்சிங் சந்தா, துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், மும்பைக்கர், தெலுங்கு படம் ஒன்று, மலையாளப் படம் ஒன்று மற்றும் மாஸ்டர். இத்தனைப் படங்களை கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு ஒரு புது நெருக்கடி ஒன்று வந்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில்,துக்ளக் தர்பார் படம், விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அரசியல் சார்ந்த கதைக்களத்துடன் படம் தயாராகிவருகிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையான கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார். பார்த்திபன் கோரிக்கை ஒன்றைத் தயாரிப்பு தரப்பில் வைத்திருக்கிறார் . துக்ளக் தர்பார் படத்தின் போஸ்டர், விளம்பரம் உள்ளிட்ட அனைத்திலும் விஜய் சேதுபதியின் பெயருக்கு இணையாக அவரின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதெப்படி முடியும் என்று கேட்டதற்கு, விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், விஜய் & விஜய் சேதுபதி என இருவர் பெயரும் இருந்ததைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார் பார்த்திபன். விஜய்யே சம்மதிக்கிறார், விஜய் சேதுபதி ஒப்புக்கொள்ள மாட்டாரா என்று பார்த்திபன் நினைத்திருப்பார் போல.

இந்தத் தகவலை விஜய் சேதுபதியிடம் எப்படி சொல்லுவது என்று தெரியாமல் பயந்துகொண்டிருக்கிறது தயாரிப்பு தரப்பு. விஜய் சேதுபதியிடம் சொன்னால் சம்மதம் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதால், தகவலை அவர் காதில் போடும்படி நெருக்கடி கொடுக்கிறாராம் பார்த்திபன்.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

ஞாயிறு 3 ஜன 2021