மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

டாக்டர் படப்பிடிப்பு அனுபவங்கள்: பகிரும் விஜய் 65 இயக்குநர்!

டாக்டர் படப்பிடிப்பு அனுபவங்கள்: பகிரும்  விஜய் 65 இயக்குநர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு படங்கள் தற்பொழுது உருவாகிவருகிறது. ஒன்று, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர், மற்றொன்று ரவிக்குமார் இயக்கத்தில் அயலான். இரு படங்களுக்குமே இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், நெல்சனின் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பிரியங்கா மோகன் இப்படத்தில் நடித்திருக்கிறார். படத்துக்கு இசை அனிருத். சமீபத்தில் படத்திலிருந்து வெளியான செல்லம்மா பாடல் வைரலானது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனுக்கு, இது இரண்டாவது படம்.

டாக்டர் வெளியாவதற்கு முன்பே சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் 65 படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்நிலையில், டாக்டர் படம் குறித்து குறிப்பிடும்போது, “ நிறைய மகிழ்ச்சிகள் படப்பிடிப்பில் இருந்ததது. முக்கியமான தம்பி சிவகார்த்திகேயனுக்கு ஸ்பெஷல் நன்றி. உன்னால் மட்டுமே இது சாத்தியமானது ’ எனவும் தெரிவித்துள்ளார் நெல்சன்.

இப்படத்தை முடித்த கையோடு, விஜய் 65 படத்தை துவங்க இருக்கிறார் நெல்சன். சமீபத்தில் விஜய் 65க்கான போட்டோ ஷூட் நடந்ததாக தகவல். அதில் விஜய் புது கெட்டப்பில் இருப்பது போல, போட்டோ ஷூட் எடுத்துப் பார்த்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனும் டாக்டரைத் தொடர்ந்து அயலான் படத்தின் இறுதி ஷுட்டிங்கை முடிக்க இருக்கிறார். அயலான் படத்தில் ரகுல்ப்ரீத் சிங், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பாபுக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

மகேஷ் பாபுக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

திரைக்கு வரும் ஆன்டி இண்டியன்!

9 நிமிட வாசிப்பு

திரைக்கு வரும் ஆன்டி இண்டியன்!

ஞாயிறு 3 ஜன 2021