மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

நாலு குட்டிப் போட்ட கொரோனா: அப்டேட் குமாரு

நாலு குட்டிப் போட்ட கொரோனா: அப்டேட் குமாரு

கொரோனா பர்ஸ்ட் பார்ட்டையே நம்மால தாங்க முடியல. இதுல நாலாவது பார்ட்டுலாம் வேற வந்திருக்கலாம்னு உலக சுகாதார மையம் சொல்லிருக்கு. இதப் பாத்துட்டு பேப்பரு படிச்சிட்டு இருந்தவரு...கொரோனா வந்து ஒரு வருஷம் ஆச்சுல்ல அதான் குட்டிப் போட்டுடுச்சு போலன்னு சிரீயஸாவே சொல்லிட்டுப் போறாரு.

புது வருஷம் பொறந்து 3 நாளாச்சு. ஜனவரி 1ஆம் தேதிலாம் ஜிம்முக்குப் போறேன், உடம்ப பிட் பண்றேன்னு தம்பி ஒருத்தர் ரெஷலூஷன் எடுத்துட்டு கிளம்பிப் போனாரு. இன்னைக்கு காலைல நல்லா அசந்து தூங்கிகிட்டு இருந்தாரு. என்ன தம்பி ஜிம்முக்கு போகலையான்னு கேட்டேன். நியூ இயர்க்கு மட்டும்தான் முடிவு எடுத்தேன், மத்த நாளுக்கெல்லாம் இல்ல. அடுத்த வருஷமும் ஏதாவது ரேஷல்யூஷன் எடுக்கணும்னு சொல்லிட்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சிட்டாரு.

நீங்க அப்டேட்ட பாருங்க...

amudu

அரசு பேருந்துகள் இல்லையென்றால் பல திருக்குறளும், ஃபேஸ்புக் இல்லையென்றால் பலரின் பிறந்த நாளும், மறந்தே போயிருக்கும் நமக்கு.

பர்வீன் யூனுஸ்

அழுக்கு ஜீன்ஸ் பேன்ட் மூலமும் கொரோனா பரவுகிறது என செய்தி வராத வரை யாரும் அதை துவைக்க போவதில்லை.

தர்மஅடி தர்மலிங்கம்

வதந்திகளை நம்ப வேண்டாம் - பிரதமர் மோடி!

அதான் ஜீ நீங்க எது சொன்னாலும் நாங்க நம்பறதே இல்லை..

மயக்குநன்

தமிழகத்தில் புத்தாண்டு மது விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.17 கோடி குறைவு!

புத்தாண்டில் குடிக்க மாட்டேன்னு கொஞ்சம் பேர் உறுதியான சபதம் எடுத்திருப்பாங்க போலிருக்கே..?!

amudu

ஆசியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை இழந்தார் முகேஷ் அம்பானி.

இதனால.. பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏறாதே..

நாகராஜ சோழன் MA.MLA

கட்டாயத் திருமணம் போன்றது அதிமுக, பாஜக உறவு. -ப.சிதம்பரம்.

தமிழ்நாட்டுக்கு நீட் வேண்டாம்னு திமுக சொல்லுது, நீட் தவறில்லனு காங்கிரஸ் சொல்லுது, அப்போ திமுக காங்கிரஸ் கூட்டணி என்ன உறவுன்னு சொல்லுங்க என் தெய்வமே...

ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 𝕣𝕒𝕛𝕒

ஞாயிறு என்பது டிராபிக் இல்லாத ரோடு மாதிரி ச்சும்மா சர்ர்ர்னு போயிடுது.

PrabuG

சென்னைக்கு மிக அருகில்னு விளம்பரம் பண்ண ரியல் எஸ்டேட் காரங்க எங்க.

ஆஸ்த்ரேலியாவுக்கு மிக அருகில்னு விளம்பரம் பண்ணுற நம்ம நித்தி எங்க..

தர்மஅடி தர்மலிங்கம்

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஊதியம்!’ - கமல்ஹாசன்#

பிக் பாஸ் பார்க்கிறவங்களுக்கு ஊக்கத்தொகையா நம்மவரே..

ச ப் பா ணி

இனி சிசேரியன் செய்ய சிறந்த நேரம்னு காலண்டரில் அச்சடித்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை

உள்ளூராட்டக்காரன்

ஒழுங்கா பெய்ய தெரிஞ்சா பெய்யி

இப்படி நச நசன்னு பேய்ஞ்சி உசுர வாங்காத

chennairain

மயக்குநன்

இதோ சூரியன் உதித்துவிட்டான்'- புத்தாண்டை வரவேற்று மோடி கவிதை!

சட்டப்பேரவை தேர்தலில் திமுகதான் ஆட்சிக்கு வரும்னு சிம்பாலிக்கா சொல்றாரோ..?!

கோழியின் கிறுக்கல்!!

சிலர் தரும் அறிவுரை,

நமக்கு 'அறு'வுரை ஆகத் தான் இருக்கிறது!!

- லாக் ஆப்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

ஞாயிறு 3 ஜன 2021