மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

ரத்தான அஜித்தின் படப்பிடிப்பு... வலிமை டீமின் புதுத்திட்டம்!

ரத்தான அஜித்தின் படப்பிடிப்பு... வலிமை டீமின் புதுத்திட்டம்!

இந்த வருடத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத், போனி கபூர் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா படத்துக்கு இசையமைத்துவருகிறார்.

வலிமை படத்துக்கானப் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நடந்துவருகிறது. படத்துக்கான ஆக்‌ஷன் காட்சிகளை சுவிட்சர்லாந்து பகுதிகளில் படமாக்க வேண்டும் என முன்னரே திட்ட்டமிட்டிருந்தார் இயக்குநர் ஹெச்.வினோத். கொரோனா அச்சுறுத்தல் காரணத்தால் வெளிநாடுகளில் படமாக்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை. அதனால், வெளிநாட்டு ஷெட்யூலினை ரத்து செய்திருக்கிறது வலிமை டீம். மாற்றாக, ஆக்‌ஷன் காட்சிகளுக்கானப் படப்பிடிப்பை டெல்லி அல்லது ராஜஸ்தான் பகுதிகளில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த புத்தாண்டினை வலிமை படக்குழுவுடன் கொண்டாடினார் அஜித். தற்பொழுது படக்குழு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மையம் கொண்டுள்ளது. எப்படியும் படப்பிடிப்பானது பிப்ரவரிக்குள் முடிந்துவிடும் என்று தெரிகிறது.அதோடு, படம் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏனெனில், அஜித்தின் 50-வது பிறந்த தின ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு வலிமை இருக்கும் என்று திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

சமீபத்தில் வலிமை படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலானது. விரைவிலேயே வலிமை படம் குறித்த அட்டகாச அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 3 ஜன 2021