மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஜன 2021

விஜய்சேதுபதி நடிக்கும் பாலிவுட் படத்தின் டைட்டில் !

விஜய்சேதுபதி நடிக்கும் பாலிவுட் படத்தின் டைட்டில் !

விஜய்சேதுபதி பாலிவுட்டில் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநராக அறிமுகமான திரைப்படம் மாநகரம். 2017ல் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்தப் படத்தை தூசித்தட்டி எடுத்து, பாலிவுட்டில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். இப்படத்தில் முக்கிய ரோலில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு ‘மும்பைக்கர்’என்று பெயரிடப்பட்டுள்ளது.

மாநகரம் படமானது சென்னையை மையமாகக் கொண்டு, சென்னை நகரின் வேறு ஒரு முகத்தைப் பதிவு செய்திருக்கும். நேட்டிவிட்டி சார்ந்த திரைப்படம். இந்த ஒன்லைனை எடுத்துக் கொண்டு, மும்பை நகரில் நடக்கும் கதையாக மாற்றியமைத்து உருவாக இருக்கிறது ‘மும்பைக்கர்’. இப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.

சேதுபதியுடன் விக்ராந்த் மஸ்ஸே, ரன்வீர் ஷோரே, சஞ்சய் மிஷ்ரா, தன்யா, சச்சின் கடேகர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கோணிப் பையில் அள்ளும் அளவுக்கு படங்களை கையில் வைத்திருப்பவர் விஜய்சேதுபதி. லாபம், காத்துவாக்குல ரெண்டு காதல், துக்ளக் தர்பார், திபர் சுந்தர்ராஜனின் படம், யாதும் ஊரே யாவரும் கேளீர், மலையாளப் படம் ஒன்று, கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட படங்கள் வரிசைக் கட்டி இருக்கிறது. இந்த லிஸ்டில், கோணிப்பைக்குள் வந்து சேர்ந்திருக்கிறது மும்பைக்கர்.

ஆதினி

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

3 நிமிட வாசிப்பு

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 2 ஜன 2021