மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஜன 2021

டைகர் வழி தலைவர் வழியா? அப்டேட் குமாரு

டைகர் வழி தலைவர் வழியா? அப்டேட் குமாரு

அரசியலுக்கு வரப் போராருனு பேசப்பட்ட ரஜினி போன வாரம் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனாரு. அதற்குப் பிறகு அரசியலுக்கு வரவே மாட்டேன்னு சொல்லிட்டாரு. இந்த வாரம் அதே போல் பெங்கால் டைகர் கங்குலியும் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா பேசினாங்க. அவரும் இப்போ ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகியிருக்காரு. அவரும் அரசியலப் பத்தி என்ன சொல்ல போறாரோ...

நீங்க அப்டேட் பாருங்க..

ரஹீம் கஸ்ஸாலி

2021 சட்டமன்றத் தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட உதயநிதி தயாரா..?- குஷ்பு

தேர்தலில் போட்டியிட எவ்வளவு நேக்கா சீட் கேட்கறாங்க பாரு...

நாகராஜ சோழன் MA.MLA

2021 தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா?.- குஷ்பு

ஓஹோ...

நீங்க தான் தமிழ்நாட்டின் ஸ்மிரிதி ராணியா?

ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 𝕣𝕒𝕛𝕒

12 மாசமா வெயிட்ட கொறச்சி ஸ்லிம் ஆகும்போது தூக்கியெறிஞ்சிடுறோம்..

காலண்டரை.

amudu

மூன்றில் இரண்டு பங்கு கடல் நீரினாலும், மீதி ஒரு பங்கு குப்பைகளாலும் ஆனது இந்த பூமி.

எனக்கொரு டவுட்டு

போன வருஷத்துல உங்களுக்கு அதிகம் கிடைச்சது என்ன ?!?

அட்வைஸ்தான்.. கை கழுவு. சானிடைசர்..டிஸ்டன்ஸ் மைண்டைன் பண்ணு.. அப்பப்பா எம்புட்டு..

ச ப் பா ணி

லீவு கேட்பது கடன் கேட்பதை விட கொடுமையானது

தர்மஅடி தர்மலிங்கம்

மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை ;அமைச்சர் விஜயபாஸ்கர்!

ஆமாமா... தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்புக்கு மட்டும் தான் வாய்ப்பு.

சரவணன். ℳ

தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என ஆர்வமுடன் இருந்தார் ரஜினி!- அர்ஜூன மூர்த்தி.

அரசியலுக்கே வராம தான் நல்லது செஞ்சிட்டாரே, போவியா?

சிலந்தி

2020 - உங்களையே நம்பி இருக்கிற மக்களுக்கு நீங்க என்ன செய்ய போறிங்க..?

2021 - நீ என்ன செஞ்ச..?

2020 - நான் வெச்சு செஞ்ச..

2021 - அததான் நானும் செய்ய போறேன் போடா..!!

மயக்குநன்

பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்!- அமைச்சர் செங்கோட்டையன்.

பொதுத்தேர்தல்ல 'ஆல்பாஸ்' கிடைக்கிறது கஷ்டமாச்சே பாஸ்..?!

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

சனி 2 ஜன 2021