மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஜன 2021

தாதா சாகேப் பால்கே விருது!

தாதா சாகேப் பால்கே விருது!

2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் நடிகர்கள் அஜித், தனுஷ், நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் விருது பட்டியலில் உள்ளனர்.

சிறந்த படமாக செழியன் இயக்கிய "டூ லெட்" படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசுரன் திரைப்படத்துக்காக தனுஷ் இந்த விருதைப் பெற உள்ளார். பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ராட்சசி படத்துக்காக நடிகை ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத் ரவிச்சந்திரனுக்கு வழங்கப்படுகிறது.

மலையாளத்தில் பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றல் விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த நடிகருக்கான விருது ``அண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25’’ படத்திற்காக சூரஜ் வெஞ்சராமுடுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது உயாரே படத்திற்காக பார்வதி திருவொத்து பெறுகிறார். உயாரே படத்துக்கு சிறந்த படத்திற்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்கான விருது நாகார்ஜுனாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக நவீன் பாலிஷெட்டியும் சிறந்த நடிகைக்கான விருது ரஷ்மிகா மந்தனாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

சனி 2 ஜன 2021