மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஜன 2021

விக்ரம் பட ரிலீஸில் கமலின் பெரிய திட்டம்!

விக்ரம் பட ரிலீஸில் கமலின் பெரிய திட்டம்!

மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த ரிலீஸ் மாஸ்டர். பொங்கல் சிறப்பாக, ஜனவரி 13ஆம் தேதி வெளியாகிறது. கார்த்தியின் கைதி படம் வெளியாகும் முன்பே, மாஸ்டர் கமிட்டானார். அதுபோல, மாஸ்டர் ரிலீஸூக்கு முன்பே, கமலின் விக்ரம் படத்தில் கமிட்டானார் லோகேஷ் கனகராஜ்.

கமல் நடிக்கும் விக்ரம் படத்துக்கான டீஸர் வீடியோ ஒன்று கூட சமீபத்தில் வெளியானது. வீடியோவைப் பார்த்ததும் கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று தெரிந்தது. தேர்தல் நேரத்தில் கமர்ஷியல் படத்தில் கமல் நடிக்கிறார் என்று பேசப்பட்டுவந்தது. ஆனால், உண்மை அது இல்லையாம்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் விக்ரம் படம் முழுக்கமுழுக்க அரசியல் சார்ந்த கதை என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை ஒரே ஷெட்யூலில் எடுத்து முடிக்க இருக்கிறார்கள். மொத்தமாக 50 நாட்களில் படத்தை எடுக்க இருக்காராம் லோகேஷ். இதில், கமல்ஹாசன் 35 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். ஜனவரி மற்றும் பிப்ரவரியில் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டாராம் கமல்.

ஏனெனில், மார்ச் மாதம் தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிளம்ப வேண்டும் என்பதால், முன்னாடியே முடிக்க வேண்டும் என்பது திட்டம். அதோடு, தேர்தல் நேரத்தில் விக்ரம் படம் வெளியாகிவிடும் என்கிறார்கள். முதலில், இந்தியன் 2 படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட இருந்தார். இந்தப் படம் தாமதமாகும் என்று தெரிவதால், விக்ரம் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார் கமல்.

அதோடு, விக்ரம் வெளியானால், தேர்தலில் ஓட்டு பெறுவதற்கு, பிரச்சார யுக்தியாக படம் பெரிதளவு உதவி செய்யும் என்று நம்புகிறார் கமல்.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

சனி 2 ஜன 2021