மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஜன 2021

வெளியானது செல்வராகவன் - தனுஷ் கூட்டணி அறிவிப்பு !

வெளியானது செல்வராகவன் - தனுஷ் கூட்டணி அறிவிப்பு !

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வருடத்தின் துவக்கத்தைக் கொண்டாடும் வகையில், புத்தாண்டுச் சிறப்பாக பல திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியானது. அதில் பெரிய எதிர்பார்ப்பு செல்வராகவனின் அறிவிப்புக்குத் தான்.

சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் தகவல் முன்னமே தெரிந்திருந்தாலும், என்ன படமாக இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. புதுப்பேட்டை 2 படமாக இருக்கலாம் என்றே பலரும்சொல்லி வந்த நிலையில், புத்தாண்டுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் செல்வராகவன்.

செல்வராகவனின் தேர்வாக இருந்தது ஆயிரத்தில் ஒருவன். இதன் இரண்டாம் பாகம் எடுக்க தயாராகிவருகிறார். கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் நடிப்பில் சோழனின் பயணமாக உருவானது தான் ஆயிரத்தில் ஒருவன். இதன் சீக்குவலா, தனுஷ் நடிக்க ஆயிரத்தில் ஒருவன் 2 படம் உருவாக இருக்கிறது. படத்தை 2024ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளார்கள்.

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் காதல்கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன ஆகியவை பெரியளவில் ரசிகர்கள் கவனம் ஈர்த்த படங்கள். அந்த வரிசையில் பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. படத்துக்கான முதல்கட்டப் பணிகளுக்கே ஒரு வருடம் தேவைப்படும் என்கிறார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகும் போது பெரிதாக வசூல் சாதனைப் படைக்கவில்லை. அதன்பிறகே கொண்டாடப்பட்டது. பொதுவாக வசூலில் பெரிய சாதனைப் படைத்தப் படங்களுக்கே, அதன் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் உருவாக்கப்படும். இந்நிலையில், வருடங்கள் கழித்து தாமதமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படத்தின் இரண்டாம்பாகம் உருவாகுவது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

சனி 2 ஜன 2021