மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

விஜய் படங்களின் ரன்னிங் டைம்: மாஸ்டருக்கு எந்த இடம் ?

விஜய் படங்களின் ரன்னிங் டைம்: மாஸ்டருக்கு எந்த இடம் ?

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் மாஸ்டர். விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்க, அனிருத் இசையில் படம் தயாராகிவருகிறது.

மாஸ்டர் படம் யு/ஏ சென்சார் சான்றுடன் ரிலீஸூக்கு ரெடி. தற்பொழுது ஒவ்வொரு ஏரியாவிலும் விநியோகஸ்தர்களிடம் எம்.ஜி. எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை விற்பனை செய்துவருகிறார் இணை தயாரிப்பாளர் லலித்குமார். அதோடு, தமிழகத்தில் ஒரு சில ஏரியாவில் நேரடியாக அவரே ரிலீஸ் செய்யவும் இருக்கிறார். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் நேரடியாக டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது மாஸ்டர்.

பொதுவாக விஜய் படங்களின் ரன்னிங் டைம் குறைந்தது 2.30 மணிநேரம் இருக்கும். அதைவிடக் குறைவாக இருந்தால் ரசிகர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், விஜய்யும் அதை விரும்ப மாட்டார். இந்த ரன்னிங் டைம் என்பது விஜய் படத்தில் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில், கமர்ஷியல் படங்களில் மாஸ் காட்சிகள் தான் அதிகம் இருக்கும். அதிகமான காட்சிகள் இருந்தால், ரசிகர்கள் விசிலடித்து கொண்டாடுவார்கள். விஜய்யின் கடைசி ஐந்து படங்களின் ரன்னிங் டைம் இப்படியாகத் தான் இருந்தது.

அட்லீ இயக்கத்தில் தாணு தயாரிப்பில் விஜய், சமந்தா நடிப்பில் 2016ல் வெளியான தெறி படத்தின் மொத்த ஓட்ட நேரம் 158 நிமிடங்கள். அதாவது, 2.38 மணிநேரம் கொண்டது. தொடர்ந்து 2017ல் வெளியான விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கத்தில் வெளியான பைரவா படத்தின் ரன்னிங் டைம் 2.49 மணிநேரம்.

மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் மொத்த ரன்னிங் நேரமானது 2.43 மணிநேரமாகும். இந்தப் படமும் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2018ல் வெளியான சர்க்கார் படமும் மெர்சல் போலவே, 2.44 மணிநேரம் தான். இரண்டுமே நீளமான படமென்றாலும், அழுப்புத் தட்டாமல் போகும்.

அப்படி, விஜய்யின் 2019ஆம் ஆண்டுக்கான ரிலீஸ் பிகில். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி பெரிய ஹிட்டான படம். ஆண்டின் அதிக வசூலும் பிகில் தான். விஜய் படங்களிலேயே அதிக ரன்னிங் டைம் கொண்ட படமும் இதுதான். பிகில் படம் 2.58 மணிநேரம் ஓடியது. தற்பொழுது மாஸ்டர் அதை விட இரண்டு நிமிடங்கள் கூடுதலாக , அதாவது மூன்று மணிநேரப் படமாக இருக்குமாம். பிகிலை மிஞ்சி மாஸ்டர் அதிக ரன்னிங் டைம் கொண்ட படமாக இருக்கப் போகிறது.

-ஆதினி

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வெள்ளி 1 ஜன 2021