மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

2020 பார்ட் டூவா 2021 : அப்டேட் குமாரு

2020 பார்ட் டூவா  2021 : அப்டேட் குமாரு

ஒருவழியா 2020 முடிஞ்சிபோச்சுன்னு அக்காடான்னு உக்காந்து வாட்ஸ் ஆப்ப ஓப்பன் பண்ணேன். மடை திறந்த வெள்ளம் போல மெசேஜா வந்து கொட்டுது நியூ இயர் வாழ்த்து. ஒருத்தன் RIP 2020 னு மெசெஜ் பண்ணான். ஏண்டா அப்டி சொல்லுறன்னு கேட்டேன். அண்ண 2020 ல வந்த கொரோனா நம்மல பாடாப் படுத்திடுச்சி. இந்த வருஷமே நமக்கு நல்லதா இல்லை. இத்தோட ஒழியுதேன்னு போட்டேன்னான். அடேய் கொரோனாங்கிறது 2019 லயே கண்டுபுடிச்சாச்சி அதுக்கு பேரே கோவிட்-19 டான்னேன்.

அதுசரி வருஷத்தோட நம்பர் மட்டும்தானே மாறியிருக்கு வேற எதுவும் மாறலயே...புதுசா உருமாறுன கொரோனான்னு ஒன்னு வேற வந்திருக்கு. அதனால இது 2021 இல்ல 2020 வருஷத்தோட பார்ட் டூ தான்னு சொன்னேன். ஏதோ எடுக்குறதுக்காக தேடிட்டு போனான்.

நீங்க அப்டேட்ட பாருங்க...

amudu

இரட்டை இலையை யாரும் முடக்க முடியாது. -அமைச்சர் டி.ஜெயக்குமார்.

இப்படி சத்தமா பேசாதீங்க. டெல்லிக்கு கேட்றப் போகுது.

நாகராஜ சோழன் MA.MLA

கொரோனாவை விட மிக மோசமான ஆபத்துக்கு உலக நாடுகள் தயாராக வேண்டும் -WHO.

சார் என்னை அப்படியே கைலாசல இறக்கி விட்டுடுங்க சார்...

balebalu

'பாசிடிவ்' என்ற வார்த்தை கேட்டவுடன் பயம் வராமல் முகத்தில் புன்னகையும் மகிழ்ச்சியும் 2021 லாவது வர வேண்டும் !

Memes Tamizha

2020க்கு நன்றி சொல்ல வேண்டும்..

ஜோசியம் ஆண்டுபலன் என்கிற பெயரில் அளந்து விட்டதை எல்லாம் பொய்பித்த ஆண்டு 2020 தான்!

ச ப் பா ணி

நாற்பதுக்கு மேல நாய்குணங்கிற மாதிரி..

மொபைல் டேட்டா Usage 50% தாண்டிட்டா ஆமை குணம் வந்திடும் போல

எனக்கொரு டவுட்டு

ரிசொல்யூசன் கைஸ் பீ லைக் ~

ஏன்டா இது கரெக்ட்டா 5 மணிக்கு அலாரம் அடிக்கும்ல !?

ஏன்டா என்னாச்சு..!?

ஜிம்முக்கு போகணும்.

ஏன்டா என்னய பார்த்தா பாவமா இல்லையா..!!

உள்ளூராட்டக்காரன்

எல்லாரும் ரொம்ப கும்மாளம் போடாதீங்கயா

2021 பார்த்துட்டு ரொம்ப ஹேப்பியா இருக்காங்கன்னு ஒரு பாயாசத்தை போட்ற போகுது

கமான், எல்லாரும் மூஞ்சிய சோகமா வச்சுக்கங்க

mohanram.ko

இன்னைக்கு படிச்சா, வருஷம் முழுக்க படிச்சமாதிரி னு சொல்லியே, என்னை எல்லாம் நியூ இயருக்கும் படிக்க வச்சாங்க

மயக்குநன்

அதிமுக கூட்டணியில்தான் பாமக உள்ளது!- ஜி.கே.மணி.

நல்லவேளை... பாமக கூட்டணியில்தான் அதிமுக உள்ளதுன்னு சொல்லாம இருந்தீங்களே..?!

கோழியின் கிறுக்கல்!

சரியாக தேதியை எழுத வேண்டும் என்பதையே,

இனி புது வருட சபதமாக எடுத்துக் கொள்ள வேண்டும் போல!!

-லாக் ஆஃப்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

வெள்ளி 1 ஜன 2021