மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

வாடிவாசலில் சூர்யாவின் சம்பளம் இவ்வளவா?

வாடிவாசலில் சூர்யாவின் சம்பளம் இவ்வளவா?

சூர்யாவுக்குக் கடந்த ஆண்டு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் ஏர் டெக்கான் கோபிநாத்தின் பயோபிக்காக உருவாகி, கமர்ஷியலாக வசூல் சாதனைப் படைத்தது.

சூரரைப் போற்று படத்துக்கு முன்பு, சூர்யாவுக்குக் கச்சிதமான ஹிட் கொடுத்தது சிங்கம் பட வரிசைகள் தான். சிங்கம் படங்களே சூர்யாவின் அடையாளமாக இருந்த நிலையில், அதை உடைத்தெறிந்தது சூரரைப் போற்று. இன்னும் ஒரு படி மேலே சென்று, நடிப்புத் திறமையை வெளிப்படுத்த சூர்யாவின் அடுத்த தேர்வாக அமைந்தது வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமே வாடிவாசல்.

புதிய தகவல் என்னவென்றால், இதுவரை சூர்யா பெறாத ஒரு சம்பளத்தை, இந்தப் படத்துக்குப் பெற இருக்கிறாராம். வாடிவாசல் படத்துக்காக சூர்யாவுக்கு 35 கோடி சம்பளம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக அஜித், விஜய் மாதிரியான நடிகர்கள் மட்டுமே 35 கோடி தாண்டி சம்பளம் வாங்கியிருக்கிறார்கள். இப்போது சூர்யாவும் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிவாசல் படத்துக்கான அறிவிப்பு கடந்த வருட சூர்யா பிறந்த தினத்தில் வெளியானது. அதன்பிறகு சில ஆரம்பக் கட்ட பணிகள் நடந்தது. அதோடு, சூரி படத்தை இயக்க சென்றுவிட்டார் வெற்றிமாறன். அதுபோல, பாண்டி ராஜ் படத்தில் நடிக்கிறார் சூர்யா. இருவருக்குமான படங்கள் முடிந்ததும், வாடிவாசல் துவங்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

வெள்ளி 1 ஜன 2021