தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் இந்த வருடத்தில் வெளியான திரைப்படம் ‘அலா வைகுந்தபுரம்லோ’. இவர் நடிப்பில் 2015ல் ‘சன் ஆஃப் சத்தியமூர்த்தி’ வெளியானது. அந்தப் படத்தின் ஹிட்டுக்குப் பிறகு, மிகப்பெரிய நீண்ட வருடங்களுக்கு பின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம் ‘அலா வைகுந்தபுரம்லோ’.
இதையடுத்து, இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார் அல்லு. இவர் தான், அல்லுவுக்கு ‘ஆர்யா’, ‘ஆர்யா 2’ என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்தவர். அல்லு அர்ஜூன் நடித்துவரும் புஷ்பா படமானது தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிவருகிறது.
இந்தப் படத்தில் வில்லன் ரோலில் நடிக்க முதலில் விஜய் சேதுபதி தான் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், விஜய் சேதுபதிக்குத் தமிழிலேயே டஜன் கணக்கில் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அதனால் கால்ஷீட் பிரச்னை ஆகியிருக்கிறது. சுகுமார் டீம் கேட்கும் தேதிகளை விஜய் சேதுபதியால் ஒதுக்கமுடியவில்லையாம்.
இப்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், விஜய் சேதுபதிக்குப் பதிலாக விக்ரமை ஒப்பந்தம் செய்துவிட முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து விசாரித்தால் இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் விக்ரம் தரப்பினர்.
‘புஷ்பா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், லாக்டவுனுக்குப் பிறகு இப்போது தான் படப்பிடிப்பைத் துவங்கியிருக்கிறது படக்குழு. அல்லு அர்ஜுனுக்கான காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டு வருகிறதாம். தவிர, காட்டில் மரக்கட்டை கடத்தல் டானாக வருகிறார் அல்லு. அதனால், காடுகளில் வரும் காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டு வருகிறது.
அதே நேரம் இப்போதைக்கு விக்ரம் கைவசம் கோப்ரா, பொன்னியின் செல்வன், மஹாவீர் கர்ணா படங்கள் லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் இந்தப் படத்தில் இணைவார் என்றே கோலிவுட் வட்டாரத்தில் தகவல் கசிகிறது. விரைவிலேயே இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
-ஆதினி