uவிக்ரம் & இந்தியன் 2 : கமலின் முதல் சாய்ஸ் எது?

entertainment

அரசியலில் ஒருபக்கம் மும்மரமாக இருந்தாலும், திரைப்படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இப்போதைக்கு இரண்டு படங்கள் கமல்ஹாசன் நடிப்பில் தயாராக இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’. 1996-ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தற்பொழுது, அதே கூட்டணியில் ‘இந்தியன் 2’ தயாராகிவருகிறது. 2018ஆம் ஆண்டே துவங்க வேண்டிய படம், பல சிக்கலைத் தாண்டி 2019-ஆம் ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி படப்பிடிப்பு தளத்தில் மிகப்பெரிய விபத்து நேர்ந்தது.

பெரும் விபத்தினால் படப்பிடிப்பு தடைப்பட்டது. கையோடு, கொரோனாவும் வந்துவிட்டதால் படப்பிடிப்பு நடத்தமுடியாமல் போனது. செப்டம்பரில் படப்பிடிப்பைத் துவங்கலாம் என அனுமதி கிடைத்துவிட்ட போதிலும், இன்னும் படப்பிடிப்பு துவங்கியபாடில்லை. அதற்குக் காரணமும் இருக்கிறது. கமல்ஹாசனுக்கும், லைகா நிறுவனத்துக்கும் நடுவிலான சில கருத்து வேறுபாடுகள் என்று சொல்லப்படுகிறது.

இந்த நேரத்தில் தான், கைதி, மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் படத்திற்கான அறிவிப்பு வெளியானது. லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்துக்கான அறிமுக வீடியோ கூட வெளியாகி செம வைரலானது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு அதற்கு நடுவில், ‘விக்ரம்’ படத்துக்கான போட்டோ ஷூட் என மும்மரமாக இருந்துவருகிறார் கமல். அதனால், ‘இந்தியன் 2’ படம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் பரவி வருகிறது. எனவே, இந்தியன் 2 படம் குறித்த அப்டேட் சொல்ல வேண்டிய சூழல்.

சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும், கமல் தரப்புக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தது. அதன்படி, இரண்டு தரப்பினர்களும் ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறார்கள். டிசம்பரில் படத்துக்கான படப்பிடிப்பைத் துவங்குவதாகத் திட்டமிட்டிருக்கிறார்களாம். முழுமையாக படப்பிடிப்புக்கு 28 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் கமல். தேவைப்பட்டால் கூடுதலாக கால்ஷீட் கொடுக்கவும் தயாராக இருக்கிறாராம். ஆனால், ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார். அடுத்த வருடம் தேர்தல் பணிகள் இருப்பதால், ஜனவரிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்பதாம்.

இப்படி, இந்தியன் 2 படத்துக்கு முன்னுரிமை கொடுத்து வேலையை முடித்துவிடத் திட்டமாம். இந்தப் படத்துக்குப் பிறகுதான் ‘விக்ரம்’ படத்துக்கான படப்பிடிப்பைத் துவங்க இருக்கிறார் கமல். ஏனெனில், விக்ரம் படமானது சொந்த தயாரிப்பு என்பதால், எப்போது வேண்டுமென்றாலும் துவங்கிக் கொள்ளலாம் என்பது கமல் கணக்கு.

**ஆதினி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *