மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 அக் 2020

பாலியல் புகார்: சிக்கும் நடிகரின் மனைவி - மகன்!

பாலியல் புகார்: சிக்கும் நடிகரின் மனைவி - மகன்!

பணம், பெயர், புகழ் இவை அனைத்தும் ஒரு திறமையான நடிகனுக்கு எளிதில் கிடைத்துவிடாது. ஏதாவது ஒரு நேரத்தில் கிடைக்கும்போது, அந்த நடிகனைவிட அவரைச் சுற்றி இருப்பவர்கள் தான் இதனை பயன்படுத்தி லாபமடைய அதிகம் துடிப்பார்கள். அப்படி எதிர்பார்க்கப்படும் லாபமும், அந்தந்த மனிதருடைய அடிப்படை குணத்தைப் பொறுத்தது. இதோ, மும்பையில் நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் அப்படிக் கிடைத்த பெயர், புகழால் ஒரு நடிகையை எப்படி மிதுன் சக்ரபொர்த்தியின் மகன் மஹாக்‌ஷய் சீரழித்தார் என்பதையே இந்த உலகுக்குக் காட்டுகிறது.

மிதுன் சக்ரபொர்த்தி, பாலிவுட் சினிமாவில் நடித்து மூன்று தேசிய விருதுகளைப் பெற்றவர். ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்தவர் என்பதால் சினிமாவிலும், மும்பை அரசியலிலும் இவரது செல்வாக்கு அதிகம். இதனைப் பயன்படுத்தி, சினிமாவில் அதிக தொடர்புகள் உள்ள நபராக இருந்தவர் மிதுனின் மகன் மஹாக்‌ஷய். டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு தன்னை ஏமாற்றி, ஜூஸில் மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக மஹாக்‌ஷய் மீது நடிகை ஒருவர் புகார் கொடுத்திருந்தார். பல வருடங்களாகக் கிடப்பிலிருந்த இந்தப் புகாரினை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கினை பதிவு செய்து விசாரிக்க மும்பை காவல்துறைக்கு உத்தரவிட்டது.

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பிறகு சினிமா தொடர்பான அத்தனை வழக்குகளையும் விரைந்து விசாரித்து வரும் மும்பை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், அந்த நடிகையிடமிருந்து அத்தனை விவரங்களும், ஆதாரங்களும் பெறப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையில் மிதுன் சக்ரபொர்த்தியின் மகன் மற்றும் மனைவி ஆகியோரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். பாலியல் வன்புணர்வு செய்தும், திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதும் மஹாக்‌ஷய் செய்த குற்றம் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், அவரது அம்மா யோகிதா பாலி மீது ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று விசாரிக்கும்போது அந்த நடிகையின் புகாரில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்கள், சினிமாவைப் போலவே நீள்கின்றன.

2015ஆம் ஆண்டு மஹாக்‌ஷய் அழைப்பின் பேரில் அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார் அந்த நடிகை. வீட்டிலிருந்தபோது மஹாக்‌ஷய் கொடுத்த ஜூஸினை குடித்ததும் அந்த நடிகை மயக்கமடைந்துவிட்டிருக்கிறார். அதன்பிறகு, சுயநினைவு வந்தபோதுதான் தன்னை மஹாக்‌ஷய் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியது தெரிந்திருக்கிறது. உன்னை நிச்சயமாக திருமணம் செய்துகொள்கிறேன் என மஹாக்‌ஷய் கொடுத்த வாக்குறுதியின் பேரில் இருவரும் காதலர்களாக தங்களது பயணத்தைத் தொடங்கியிருக்கின்றனர். இப்படியே சென்ற இந்த உறவில், பலமுறை அந்த நடிகையை பாலியல் ரீதியாக அணுகியிருக்கிறார் மஹாக்‌ஷய். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த நடிகை கர்பமாக இருப்பதை அறிந்ததும், அதன்பின் அந்நடிகையுடனான முழு தொடர்பையும் துண்டித்துவிட்டிருக்கிறார். சில நாட்களிலேயே மஹாக்‌ஷய்யின் தாயும், மிதுன் சக்ரபொர்த்தியின் மனைவியுமான யோகிதா அந்த நடிகையைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

நடந்தவை அனைத்தையும் அவர் அறிந்ததாகவும், இந்த சூழ்நிலை ஏற்படுத்திய பதட்டமும், என் மீதான பயமும் என் மகனை கலங்கடித்துவிட்டன என்று பேசியிருக்கிறார் யோகிதா. இப்படி அந்த நடிகைக்கு தைரியம் கொடுத்து, வயிற்றில் இருக்கும் குழந்தைக்குத் தேவை என சில மருந்துகளைக் கொடுத்ததுடன், உனக்கும் என் மகனுக்கும் சீக்கிரமே திருமணம் செய்துவைக்கிறேன் என வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். இவற்றை நம்பிய அந்நடிகை, யோகிதா கொடுத்த மருந்துகளையும் சாப்பிட்டதால் சில நாட்களிலேயே வயிற்றிலிருந்த கரு கலைந்திருக்கிறது. இதன்பின் எதன் மூலமாகவும் மஹாக்‌ஷய் உடனான தொடர்புகளை அந்நடிகையால் நிரூபிக்கமுடியாது என்பதை அறிந்து யோகிதாவும் அந்நடிகையுடனான தொடர்புகளை துண்டித்திருக்கிறார். இவை அனைத்தையும் மும்பை காவல்துறையிடம் அந்நடிகையை புகாராகக் கொடுக்க, மிதுன் சக்ரபொர்த்தியின் மனைவி - மகன் ஆகியோரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

-முத்து-

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

3 நிமிட வாசிப்பு

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

திங்கள் 19 அக் 2020