மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 அக் 2020

மாட்டிக்காம இருக்க மாட்டிக்குவோம்: அப்டேட் குமாரு

மாட்டிக்காம இருக்க மாட்டிக்குவோம்: அப்டேட் குமாரு

யாரைப் பாத்தாலும் மாஸ்க் போடாமலே போய்க்கிட்டிருக்காங்க, ஒரு ஆட்டோவுல ஏறினேன். ஆட்டோ டிரைவர்கிட்ட எங்கண்ணே மாஸ்க்னு கேட்டேன். இந்த ஏரியாக்கெல்லாம் கொரோனா வராது தம்பினு சொன்னாரு. மாஸ்க் எங்கேனு தேடிப் பாத்தா, மல்லிகை பூ தொங்கவிட்டிருந்த கொக்கியில மாட்டி வச்சிருந்தாரு. போலீஸ் வந்தா மட்டும் எடுத்து மாட்டிக்குவோம்,.. இல்லேன்னா நாம போலீஸ்கிட்ட மாட்டிக்கணுமேனு டயலாக் பேசினாரு. ஒரு தும்மலை போட்டேன்... பட்டுனு எடுத்து மாஸ்க்கை போட்டுக்கிட்டாரு.

இவங்களை எல்லாம் திருத்தறதுக்குள்ள கொரோனாவே மாஸ்க் போட்டுக்கிட்டு போயிடும் போலிருக்கு.

நீங்க அப்டேட் பாருங்க

சரவணன். ℳ

``நான் பி.ஜே.பி ஆள் இல்லை!" - ரங்கராஜ் பாண்டே.

பிஜேபில இருக்கறவன் லாம் ஆள் இல்லைன்னு தான் எல்லோருக்கும் தெரியுமேய்யா...

மயக்குநன்

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 20 மாவட்டங்களில் 101 பேர் கைது!

'அறுவடை' முடிஞ்சபிறகு 'களையெடுப்பு' நடக்குது போல..?!

தர்மஅடி தர்மலிங்கம்

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட முடியும்-சி.டி.ரவி!

போட்டியிட முடியும் ஆனா நோட்டாவ ஜெயிக்க முடியுமா.?

Memes Tamizha

மாறிவரும் வேலை வாய்ப்புக்கு ஏற்ப இளைஞர்கள் தயாராகி கொள்ள வேண்டும்- ஜி

பட்டதாரிகள்~ எது பக்கோடா விக்கிறதுக்கா!

சரவணன். ℳ

ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியலை ~ சிபிஐ

ஆட்களை அடையாளம் காண முடியலை ~ ஆதார் ஆணையம்

எல்லையை பாதுகாக்க முடியலை ~ ராணுவம்

நேர்மையா தேர்தல் நடத்த முடியலை ~ தேர்தல் ஆணையம்

மோடி நவ் ~ "இவங்கல்லாம் சரியா செயல்பட முடியலை. நான் மட்டும் சரியா செயல்படலைன்னு கேட்டா எப்படி..."

ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 ℝ𝕒𝕛𝕒

ஓட்டுனரும், நடத்துனரும் இளையராஜா ரசிகராக இருந்தால் பயணிகள் அதிர்ஷ்டசாலிகளே!

PrabuG

பிக்பாஸ், சிஎஸ்கே ரெண்டுக்கும் இந்த சீசன்ல பிரச்சனை ஒன்னுதான்.

கன்டெஸ்டன்ட்ஸ் சரியில்லை!!

தர்மஅடி தர்மலிங்கம்

விதிகளை மீறி சூரப்பா செயல்பட்டால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது: அமைச்சர் கே.பி.அன்பழகன்!

ஒருவேளை கண்ணை மூடிக்குவாங்களோ.!

பர்வீன் யூனுஸ்

கொரோனா காலத்திலும் இந்தியாவில் பசி, பட்டினி ஏற்படாமல் பார்த்துக் கொண்டோம்!- மோடி # யாருக்குன்னு சரியா சொல்லுங்க.. மக்களுக்கா..மயிலுக்கா..?

நாகராஜ சோழன் MA.MLA

ஷேர் ஆட்டோ, மற்றும் பயணிகள் ஆட்டோக்களுக்கும் இனி சுங்கக்கட்டணம் -செய்தி!

சார், டோல் கேட் வழியா மாடு, ஆடு எல்லாம் ஓட்டிட்டு மேய்க்க போலாமா? இல்ல அதுக்கும் காசு வாங்குவீங்களா???

யூதாஸின் முத்தம்

இந்த புகைப்படம் உலக புகழ் பெற்றது

ஸ்பெயினில் ஒரு காளையை வளர்த்த முதலாளி அதனை நல்ல லாபத்திற்கு சண்டையிட்டு கொல்லப்படுவதற்காக விற்று விடுகிறார் . மாடு அலங்கரிக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டு களத்தில் நிறுத்தப்படுகிறது .

அதற்கு என்னவென்றே புரியும் முன் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட மெல்ல துடித்து சாக துவங்குகிறது . அந்த மாட்டில் முதலீடு செய்தவர்கள் அந்த யுத்தம் அதிகம் நேரம் நடந்தால் அதிக லாபம் கிடைக்கும் என மகிழ்கிறார்கள் .

யுத்தம் எப்படி செல்ல வேண்டும் என அதன் போக்கை மேலே மேடைகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து தீர்மானிக்கிறார்கள் ..

திடிரென மாட்டை விற்ற முதல் முதலாளி வருகிறார் . அவரை நோக்கி மாடு தன் உயிரை காப்பாற்றுவான் என நினைத்து ஓடி வருகிறது . அவர் அதற்கு அன்புடன் முத்தம் தருகிறார் .

மீண்டும் அறிவுரைகள் சொல்லி களத்தில் போராட திருப்பி விடுகிறார் . மீண்டும் மீண்டும் மாடு உடலெங்கும் கத்தியால் குத்தப்பட்டும் கிழிக்கப்பட்டு அந்த விற்றவரை நோக்கி உதவி கேட்டு ஓடி வருகிறது . ஒவ்வொரு முறையும் முத்தமிட்டு களத்தில் போராட சொல்கிறார் ..

மக்கள் அந்த அப்பாவி மாடு போல தான் ... கொடூர முதலாளித்துவ அரசியல்வாதிகளை நோக்கி உதவி விட மாட்டார்களா என ஒவ்வொரு முறையும் நம்பி ஓடுகிறார்கள் .

-லாக் ஆஃப்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

3 நிமிட வாசிப்பு

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

திங்கள் 19 அக் 2020