மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

பிக் பாஸ் 4: முதல் எவிக்‌ஷன்!

பிக் பாஸ் 4: முதல் எவிக்‌ஷன்!

பிக் பாஸ் வீடு களைகட்டும் என எதிர்பார்த்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. ஆனால், இதுவரையிலும் எந்த பரபரப்பான சம்பவங்களும் நடைபெறாமல் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதும், சண்டையிடுவதும் அதைச் சிலர் சேர்ந்து சமாதானப்படுத்துவதும் என சீரியல் கணக்காகச் சென்றுகொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் எவிக்‌ஷன் ரவுண்டுக்கும் வந்தாகிவிட்டது. இன்று (18.10.2020) இரவு கமல் யாரை எவிக்ட் செய்யப்போகிறார் என்பதிலிருந்து வீட்டுக்குள் நடைபெறும் சுவாரஸ்யங்கள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

சனம் ஷெட்டி - ரேகா ஆகிய இருவரில் ஒருவர் வெளியாகப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. இதில் யாரை உள்ளே வைத்திருந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு லாபம் என யோசிப்பதைவிட, யாரை வெளியே அனுப்பினால் பிக் பாஸுக்கு லாபம் என்பதை யோசித்தால், அங்கு வந்து நிற்பவர் ரேகா.

சனம் ஷெட்டியைப் பொறுத்தவரையில், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முக்கியமான சொத்து. ‘கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்’ என்ற பாடலைப் போல, பிக் பாஸ் வீட்டுக்குள் கண்ணில்படுகிறவரையெல்லாம் வம்படித்துக்கொண்டிருக்கிறார் சனம். ‘பிக் பாஸ் பரிசளித்த மீன்களைக் கொண்டு எப்போது குழம்பு வைப்பது என்று பரிசாகப் பெற்ற ரேகா தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று பாலாஜி சொன்னதற்கு, 'என்னை ஹர்ட் பண்ணிட்டீங்க' என்று சனம் பஞ்சாயத்து வைத்தது ஒரு சேம்பிள் தான். இதுபோல, வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரிடமும் நூறு குற்றங்களையும், அதன் மூலம் ஆயிரம் சண்டைகளையும் தொடங்கக்கூடிய சனம் ஷெட்டியை வெளியேற்றுவது, அவரை உள்ளே கொண்டுவந்திருக்கவே வேண்டாம் அல்லவா?

அதேநேரம், ரேகா இருப்பதால் வீட்டில் ஏற்படும் நல்லது என்று எதையும் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை. ‘பிக் பாஸ் வீட்டில் ரேகா இருக்கிறார்’ என்றால், ‘ஆமாம். அவரும் இருக்கிறார்’ என்று சொல்லக்கூடிய விதத்தில், எங்காவது ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே தவிர, ரேகாவினால் ஏற்படும் மாற்றம் என்று பிக் பாஸ் வீட்டுக்குள் எதுவும் இல்லை. பஞ்சாயத்தை உருவாக்கவில்லை என்றாலும், நடக்கிற பஞ்சாயத்தையும் பானையை உருட்டி உடைப்பது போல உடைத்துவிடுகிறார் ரேகா. கேப்டன்ஷிப்புக்கு நடந்த போட்டியில், வேல்முருகனை சுமந்துகொண்டு ஆரி நின்றுகொண்டிருந்தபோது, அவர் மீதிருந்த கையை எடுத்து பல மணிநேரங்களுக்கு நீண்டிருக்கவேண்டிய விளையாட்டை காலி செய்துவிட்டார் ரேகா.

இப்படி வீட்டுக்குள் இருப்பதால், பிக் பாஸுக்குக் கிடைக்கக்கூடிய ஸ்டோரிக்களை உடைத்தெறியும் ரேகாவையே இந்த வார எவிக்‌ஷனில் வெளியேற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட வாய்ப்பு என்னவெல்லாம் இருக்கிறது என்று யோசித்துக்கொண்டிருந்தால், ‘ரேகா கேட்டதுக்காக மீன் பரிசா கொடுத்தாரே பிக் பாஸ். அதுலயே தெரியலயா, அவங்க தான் இந்த வாரம் வெளியப் போவாங்க’ என்று என் அம்மாவும் சொல்கிறார். எனவே, இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அம்மா சொல்வது உண்மையா என்று தெரிந்துவிடும்.

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

4 நிமிட வாசிப்பு

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

3 நிமிட வாசிப்பு

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

ஞாயிறு 18 அக் 2020