மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

டெல்டா தமிழச்சியாக ஜோதிகா

டெல்டா தமிழச்சியாக ஜோதிகா

நடிகை ஜோதிகாவுக்கு இன்று (அக்டோபர் 18) பிறந்தநாள். திரையுலகத்தினரும், ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில்... ஜோதிகாவை வைத்து அடுத்த படத்தை இயக்கியுள்ள இயக்குனர் இரா. சரவணன் தெரிவித்திருக்கும் வாழ்த்தில் சில புதிய செய்திகளும் இருக்கின்றன.

கத்துக்குட்டி படத்தின் இயக்குனரான தஞ்சையைச் சேர்ந்த இரா. சரவணன் , தற்போது இயக்கி வரும் படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார். இந்த படப்பிடிப்புக்காக தஞ்சை வரும்போதுதான் தஞ்சை அரசு மருத்துவமனையை பார்த்து சில கருத்துகளை ஜோதிகா சொல்ல, அது பெரும் சர்ச்சையாகிப் போனது.

இந்நிலையில் ஜோதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குனர் இரா. சரவணன், “தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் ஷூட்டிங். வந்தோம் நடித்தோம் என்றில்லாமல் மருத்துவமனை சூழலைக் கவனித்தார். மக்களுடன் அக்கறையாகப் பேசினார்.

தஞ்சை பெரிய கோயில் குறித்து அவர் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில், இரண்டு நாட்கள் கழித்து நடந்தது குறித்து நான் முகநூலில் விளக்கம் எழுதினேன். “இதுகுறித்து நீங்க பேசாததால நீங்களும் என் கருத்தை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களோன்னு நினைச்சிட்டேன் சார். இப்போதான் உங்க பதிவைப் படிச்சுக் காட்டினாங்க. தஞ்சாவூர்க்காரரா நீங்க என்னை நம்புறதே போதும். ராசா மிராசுதார் ஹாஸ்பிடலுக்கு நேர்ல போய் நம்மால முடிஞ்ச உதவியை செய்யனும்னு நினைக்கிறேன் சார்” என்றார். ஆனால், கொரோனா குறுக்கிட்டது. வேறு யாராக இருந்தாலும் கொரோனா பரபரப்பில் அந்த விஷயத்தைக் கிடப்பில் போட்டிருப்பார்கள். ஆனால், மருத்துவமனைக்கு என்னை நேரில் அனுப்பி, முதல்வர் திரு மருதுதுரை அவர்களுடன் பேச வைத்து, மருத்துவமனைக்குத் தேவையான உதவிகளைக் கேட்டறிந்து, 25 லட்ச ரூபாய் நிதியை அறிவித்தார் ஜோதிகா. கோயிலுக்கு நிகரான மனம்!”என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ நடிப்பில் ஜோதிகா அசகாயர் என்பது எல்லோரும் அறிந்ததே... இந்தப் படத்தில் மாதங்கி என்கிற பாத்திரத்தில் குணவதியாக, குடும்பத் தலைவியாக, பாசத்துக்காகத் தத்தளிக்கும் தங்கையாக அவர் வாழ்ந்திருக்கிறார். டப்பிங், எடிட்டிங் பணிகளைப் பார்க்கும் போதே கண்களைத் ததும்ப வைக்கிறது அவருடைய பாசப் போராட்டம். பந்த பாச உறவுகளில் நெகிழ்ந்து கிடக்கும் நம் டெல்டா மாவட்ட வாழ்வியலை மாதங்கியாக கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் ஜோதிகா. எங்கள் மண்ணின் மனுஷியாக வாழ்ந்து காட்டியிருக்கும் மாதங்கிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

4 நிமிட வாசிப்பு

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

3 நிமிட வாசிப்பு

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

ஞாயிறு 18 அக் 2020