மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 23 அக் 2020

நவராத்திரி பில்டப்பு: அப்டேட் குமாரு

நவராத்திரி பில்டப்பு: அப்டேட் குமாரு

இன்னிலேர்ந்து நவராத்திரி ஆரம்பிக்குது. பிரதமர் மோடியே வாழ்த்து சொல்லியிருக்காரு. நவராத்திரின்னா என்னானு கேட்டா சிவாஜி நடிச்ச படம்னுதான் எனக்கு தெரியும். அதனால விஷயம் தெரிஞ்ச சில பேர்கிட்ட கேட்டேன்.

அசுரர்களை அழிக்கறதுக்கு ஆண் கடவுள்களுக்கு சக்தி பத்தாததால அவங்களை எல்லாம் பொம்மையாக்கிட்டு...லட்சுமி,பார்வதி, சரஸ்வதினு மூன்று பெண் கடவுளும் சேர்ந்து ஒன்பது நாள் நடத்தின வேட்டைதான் நவராத்திரினு சொன்னாங்க. ஆம்பளைங்கள எல்லாம் பொம்மையாக்கி வச்சதுதான் கொலுவாம். அதாவது இந்த ஒரு வாரம் ஃபுல்லா பெண்கள்கிட்டதான் பவர் இருக்குமாம். வருசத்துல ஒரு வாரம் மட்டும் பவரைக் கொடுத்துட்டு இதுக்கு எம்புட்டு பில்டப்பு...

நீங்க அப்டேட்டைப் பாருங்க.

James Stanly

மருத்துவம் வியாபாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே NEET..

NEET Coaching Centre Fees என்னானு தெரியுமா..

வெளிநாட்டு கைகூலி..

மயக்குநன்

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? ஆளுநர் ஆட்சியா?- ராமதாஸ் கேள்வி.

கூவத்தூர் வழியா ஆட்சி அமைச்சதை குத்திக் காட்டுறாரு போல..?!

சரவணன். ℳ

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் பலன் தரவில்லை என ஐ.சி.எம்.ஆர் தகவல்.

தேஸ்பக்தாள்ஸ் ~ "நாங்க வேணா கையைத் தட்டி, விளக்கு பிடிக்கட்டுமா...? "

Zen Selvaa

நீட் தேர்வில் திரிபுரா உத்தரகண்ட் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைப் போன்று தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி நிலவரமும் இருந்தது.

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்றால் பாஜக வேட்பாளர் ஒரு லட்சத்தி பத்தாயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பார்

ரஹீம் கஸ்ஸாலி

நீட் என்பது நீட்டான ஒரு வியாபாரம், கோச்சிங் செண்டர்களுக்கு...

மெத்த வீட்டான்

பாரதி கண்ணம்மா,சித்தி,பிக்பாஸ்

இவைகளை தாண்டி ஐபிஎல் பார்ப்பது என்பது ஆண்களுக்கு கடினமான டாஸ்க்தான்!

மயக்குநன்

பிரதமர் மோடிக்கு சொந்தமாக கார் இல்லை!

அதான்... சர்க்'கார்' இருக்கே..?!

சரவணன். ℳ

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கின்றனர் - எல்.முருகன்.

எப்படி, பாஜக இப்ப அதிமுகவை செயல்படக் கூட விடாமல் தடுக்குதே, அந்த மாதிரியா..?

மயக்குநன்

கொரோனா தடுப்பூசிக்காக இளைஞர்கள் 2022 வரை காத்திருக்க வேண்டும்!- உலக சுகாதார அமைப்பு.

அதுவரைக்கும்... கொரோனா காத்திருக்கணுமே..?!

Dr.Aravind Raja

எனக்கு சொந்தமாக வீடோ காரோ கிடையாது - பிரதமர் மோடி

~ நீங்க பிரதமர் ஆனதுக்கு பிறகு நாட்ல பாதி பேருக்கு சோத்துக்கே வழி கிடையாது ஜீ..

லாக் ஆஃப்

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon