gஎஸ்பிபியின் சிகிச்சை கட்டணம் எவ்வளவு?

entertainment

புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிகிச்சை கட்டணத்தை அவரது குடும்பத்தினரே செலுத்தியது தெரியவந்துள்ளது.

16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, நாடு முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி இயற்கை எய்தினார்.

‘மீண்டு வந்து விடுவேன்’ என்று எஸ்பிபி தெரிவித்திருந்த நிலையில் அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் துயரை ஏற்படுத்தியது. இதனிடையே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளும் வதந்திகளும் கிளம்பின. அதில் ஒன்றுதான் எஸ்பிபி சிகிச்சைக் கட்டணம்.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டர், எக்மோ கருவி எனத் தொடர்ந்து உயிர் காக்கும் கருவிகளுடன் இறுதிவரை சிகிச்சை பெற்றார். எம்ஜிஎம் மருத்துவமனையில் இல்லாத ஒரு மருத்துவ உபகரணமும் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதோடு இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மருத்துவக் குழுவும் எம்ஜிஎம் மருத்துவக் குழுவுடன் இணைந்து சிகிச்சை அளித்தது. மருத்துவர்கள் சபாநாயகம், நந்த கிஷோர், சுரேஷ் ராவ், தீபக் சுப்பிரமணியம், கே. ஆர் பாலகிருஷ்ணன் அடங்கிய குழு எஸ்பிபிக்கு சிகிச்சை அளித்து வந்தது.  டிரக்யாஸ்டமி, பிசியோதெரபி உள்ளிட்ட   சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

இவ்வாறு 52 நாட்கள் தொடர் சிகிச்சையிலிருந்த எஸ்பிபி உயிரிழந்த நிலையில் அவரது சிகிச்சைக் கட்டணம் தொடர்பான சர்ச்சை எழுந்தது.

எம்ஜிஎம் மருத்துவமனை அதிகளவு கட்டணம் கேட்டதால் இதனைச் செலுத்த முடியாத நிலையில் எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் தமிழக அரசின் உதவியை நாடினார், தமிழக அரசு உதவாததால் தான்,  குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் உதவியை நாடியதாகவும், இதையடுத்து  குடியரசு துணைத் தலைவரின் மகள் தீபா வெங்கட் உதவியதாகவும் தகவல் வெளியானது.

இதனால் கோபமடைந்த எஸ்பிபி சரண் மருத்துவ குழுவினருடன் இணைந்து செப்டம்பர் 28ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது,” மருத்துவக் கட்டணம் தொடர்பாகப் பரவும் தகவல்கள் உண்மை இல்லை. எம்ஜிஎம் மருத்துவமனை  பணம் கட்டினால் தான் அப்பாவின் உடலைக் கொடுப்போம் என்று அழுத்தம் கொடுக்கவில்லை. அப்பா இறந்ததுமே மருத்துவமனைக்கு எங்கள் அக்கவுண்டன்ட் பணத்துடன் வந்திருந்தார். எங்களால் பணம் கட்ட முடியாது என்று இல்லை.

அப்போது, எங்களிடம் எந்த கட்டணமும் வாங்க வேண்டாம் அனைத்து நடைமுறைகளையும் முடித்துக்கொண்டு எவ்வளவு சீக்கிரம் அனுப்பி வைக்க முடியுமோ அனுப்பி வையுங்கள் என்று மருத்துவமனையின் சேர்மனிடம் இருந்து தகவல் வந்தது. எனவே மருத்துவமனைக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை” என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் எஸ்பிபிக்கு 2  கோடி ரூபாய்க்கும் மேல் சிகிச்சை கட்டணம் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. அதுவும் அவர்களது குடும்பத்தினரே சிகிச்சைக்கான  முழு கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். பாடகர் எஸ்பிபி சம்பாதித்ததே 110 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பதாகவும்,  எனவே மருத்துவமனையில் இறந்த போது பணம் புரட்டுவதற்குத்தான் காலதாமதம் ஆனதே தவிர மற்றபடி கட்டணத்தை எஸ்பிபி குடும்பத்தினர்தான் செலுத்தியதாக அவரது உறவினர்கள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *