பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால்

அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடியுள்ள படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இதை காஜல் அகர்வாலே உறுதிப்படுத்தி உள்ளார். திருமணம் செய்துகொள்ள போகும் காஜல் அகர்வாலுக்கு நடிகர் நடிகைகளும், ரசிகர்களும் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடியுள்ளார். அவர்கள் இருவரும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டே திருமணம் ஆனது. அவருக்கு இஷான் என்ற குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.