மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

கமல்-லோகேஷ் கூட்டணி: தேர்தலுக்கு முன்பே ட்ரீட்!

கமல்-லோகேஷ் கூட்டணி:  தேர்தலுக்கு முன்பே  ட்ரீட்!

ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் இணைந்து கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்றும் இதை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் சில மாதங்களாகவே தகவல்கள் வந்துகொண்டிருந்தன..

இந்த சூழலில் இன்று (செப்டம்பர் 16) கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கமல்ஹாசனின் 232 ஆவது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விஸ்வரூப நாயகனுடன்,தன்னுடைய குறுகிய கால திரைப்பயணத்தில் சாதித்திருக்கும் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கரம் கோர்க்கும் போது திரையில் வரப்போவது திரைப்படம் அல்ல சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில்... படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை. அனிருத் இசையமைக்க 2021 ஆம் ஆண்டின் சம்மரில் இந்த படம் வெளிவரும் என்கிறார்கள் தயாரிப்பு தரப்பில்.

அப்படி என்றால் ரஜினி -கமல் -லோகேஷ் கனகராஜ் காம்பினேஷன் என்னாச்சு?

" ஊரடங்கு காரணமாக பல படங்களைப் போலவே ரஜினியின் அண்ணாத்த படமும் இன்னும் முடியாமல் இருக்கிறது. இதேபோல கமல்ஹாசனின் இந்தியன் 2 படமும் நிறைவடையவில்லை. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு தனக்கான ஒரு படத்தை வெளியிட தீர்மானித்து கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் ஒருங்கிணைந்து குறுகிய கால கொண்டாட்டமாக 232 வது படத்தை தொடங்கி விட்டனர். இதற்காக ரஜினி- கமல்- லோகேஷ் கனகராஜ் காம்பினேஷன் இல்லை என்று ஆகி விடவில்லை. அதற்கு இன்னும் சில காலம் ஆகலாம்” என்கிறார்கள்.

-வேந்தன்

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon