மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

இதான்யா நம்ம மாநிலத்தோட ஸ்பெஷல்: அப்டேட் குமாரு

இதான்யா நம்ம மாநிலத்தோட ஸ்பெஷல்: அப்டேட் குமாரு

“வணக்கம் சார், சௌக்கியமா?”, மளிகைக் கடையில் பொருள் வாங்கிக்கொண்டு திரும்பிய சுப்ரமணியன் சாரிடம் கோரஸாகக் கேட்டார்கள் கண்ணனும் குமாரும். “தம்பிங்க யார்னு தெரியலையே?”, சார் கோடுகள் விழுந்த நெற்றிப்புருவம் சுருக்கி பார்த்தார். அழுத்தமான கண்ணாடியை கழற்றித் துடைத்து மீண்டும் மாட்டினார். “உங்க கிட்ட பத்தாங்கிளாஸ் படிச்சேனே சார்? கண்ணன்?”, என்று கண்ணனும், “நீங்க கூட அவனுக்கு பன்னெண்டாங்கிளாஸ் பரீட்சை பணம் கட்டுனீங்க?”, குமார் அவருக்கு புரிய வைக்க முயற்சி செய்து தோற்றான். “தெரியலையேப்பா..அப்பா பேரு சொல்லுய்யா?”, என்று சார் திரும்பிக் கேட்கவும், “அப்பா மரம் வெட்ட, கூலி வேலைக்குன்னு போவார் சார், சின்னான் பேரு”, சொல்லும்போதே கண்ணனுக்கு குரல் கம்மியது. சட்டென உற்சாகமானார் சுப்ரமணியன் சார்.

“அடடே சின்னான் மகனா? என்ன செய்ற தம்பி இப்ப?”, என்ற அவர் கேள்விக்கு, “நெய்வேலில எஞ்சினியர் சார். மாசம் 80,000 சம்பளம், வீடு கார்னு அங்கேயே செட்டில் ஆயிட்டேன் சார். தம்பி கல்யாணம், அதான் ஈபாஸ் வாங்கி வந்து சேர்ந்தேன்”, என்று பெருமையுடன் சொன்னான் கண்ணன்.

“ரொம்ப மகிழ்ச்சி தம்பி. நம்ம கல்வித்திட்டத்துக்கு தான் நன்றி சொல்லணும்யா. பள்ளிக்கூடமே போகாத ஆளு உங்கப்பா. ஆனா இன்னிக்கு நீ வீடு, காருன்னு சந்தோஷமா இருக்க. இதான்யா நம்ம மாநிலத்தோட ஸ்பெஷல், எல்லாருக்கும் எளிதா கல்வி கிடைக்குது பாருங்க?”, என்றார். “அதை தானே சார் முழுசா உடைக்க நினைக்கிறாங்க? மூணாங்கிளாஸ், அஞ்சாங்கிளாஸ் புள்ளைங்களுக்கு பரீட்சை வெச்சா எளிய வீட்டு புள்ளைங்க என்ன சார் செய்வாங்க?”, என்று குமார் கேட்டான். “மாத்தணும் ஐயா..இதையெல்லாம் எதுக்கணும். கல்வி எல்லாருக்குமானது, அதை மேல்தட்டு மக்களுக்கு மட்டும்னு மாத்த நினைக்கிறது தப்புய்யா..எங்கிட்ட படிச்ச புள்ளைக நீங்க. இதை எல்லாம் மாத்த சொல்லி போராடுங்க. நம்ம புள்ளைங்க மட்டும் படிச்சா பத்தாது.

எல்லா வீட்டு புள்ளைங்களும் படிக்கணும், அதுக்கு வசதி செஞ்சு தாரது நம்ம கடமைய்யா”, சொல்லிவிட்டு பெருமூச்சுடன் நகர்ந்தார் சார்.

வாங்க நம்ம அப்டேட்ட பார்ப்போம்.

சரவணன்.எம்

தமிழகத்தில் இ-பாஸ் முறையில் எந்த மாற்றமும் இல்லை! - தமிழக அரசு. ஆமாமா, போய்ட்டு வந்து கூட வாங்கிக்கலாம்...

அருணன் கதிரேசன்

மும்மொழி திட்டம் தொடர்கிறது. இந்தியோடு சேர்ந்து சமஸ்கிருதமும் வருகிறது: இதுதாங்க புதிய கல்வி கொள்கை! பேச்சுதாங்க தமிழுக்கு, செயல் எல்லாம் ஆரியத்துக்கு: இதுதாங்க மோடி!

நாகராஜ சோழன் MA.MLA

லாக் டவுனாக நீயிருந்தால்.... E.PASS ஆக நானிறுப்பேன்....

சாரா தினேஷ்

கிஷோர் கே சாமியை கைது செய்தது சென்னை காவல் துறை.. ஆளுங்கட்சி அமைச்சரின் பினாமி வீட்டில் இருந்து தப்பிய போது கைது..

சயின்டிஸ்ட் சந்துரு

வாழ்க்கையில் டிவிட்டர் மாதிரி சில விஷயங்களை ‘Retweet’ பண்ணி புதுப்பித்தும் தேவையில்லாத நபர்களை ‘Mute’ பண்ணிட்டு நம்மை பற்றி நெகிடீவ் இமேஜ் கிரியேட் பண்றவங்களை ‘Block’ பண்ணிட்டு வாழ்ந்தோம்னா வாழ்க்கை நல்லாயிருக்கும்.

*ஜோக்கர்

ஜி ~ நான் டிகிரி முடிக்காத இந்த ஊருல இனி எவனுமே டிகிரி படிக்க கூடாது.. #NEP2020 #TNRejectsNEP

சப்பாணி

பெண்கள் எப்போதும் மைகிரேஷன் தான்.ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் சந்தோஷமாக போறதுல பெண்களுக்கு இணையா எதையும் சொல்ல முடியாது -சா.கந்தசாமி

நாகராஜ சோழன் MA.MLA

திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும்

ஆனா டாஸ்மாக் ல மட்டும் 500 பேர் கூடினா கூட கொறோனா தொற்று ஏற்படாது ,

அப்படித்தானே!!!

மாடிபடி ஏறும்போது கால் இடறி கீழே விழுந்த பாட்டிக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் சொன்னார்.

"பாட்டி இனிமே ஆறுமாசத்துக்கு மாடிபடி ஏறக்கூடாது"

ஆறுமாதம் கழித்து:

"பாட்டி இனிமே தாராளமா மாடிபடி ஏறலாம். கால் நல்லாயுடுச்சி"

"அப்பாடா இப்பவாது சொன்னியே.எத்தன நாளைக்குத்தான் பைப்வழியா ஏறி இறங்குறது 😜😂

ஊரடங்கும் நாமளும்😌

இப்பிடி தான் போயிட்டு இருக்கு 😂

லாக் ஆஃப்

மீண்டு(ம்) வாழ வருகிறேன்: இயக்குநர் வசந்தபாலன்

3 நிமிட வாசிப்பு

மீண்டு(ம்) வாழ வருகிறேன்: இயக்குநர் வசந்தபாலன்

நிதி நெருக்கடி: புலம்பும் ஸ்ருதி

3 நிமிட வாசிப்பு

நிதி நெருக்கடி: புலம்பும் ஸ்ருதி

அசுரன் படத்திற்கு இணையதளத்தில் கிடைத்த கெளரவம்!

3 நிமிட வாசிப்பு

அசுரன் படத்திற்கு இணையதளத்தில் கிடைத்த கெளரவம்!

வெள்ளி 31 ஜூலை 2020