மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

பயிற்சியாளராகும் தமிழக வீரர்!

பயிற்சியாளராகும் தமிழக வீரர்!

2020ஆம் ஆண்டிற்கான கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் முன்னணி அணியின் பயிற்சியாளராக தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மலோலன் ரங்கராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டிற்கான கரீபியன் ப்ரீமியர் லீக் டி -20 தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான செயின்ட் கிட்ஸ் அண்ட் நிவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான 31 வயதான மலோலன் ரங்கராஜன் தேர்வாகியுள்ளார். இதுகுறித்து பிடிஐ ஊடகத்துக்கு பேட்டி அளித்த அவர், "எனது கிரிக்கெட் வாழ்வில் இவ்வளவு விரைவில் பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். மேலும், இந்தத் தருணத்தில் பயிற்சியாளராகும் வாய்ப்பினை சுவாரசியமான சவாலாக எண்ணுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சாரணர் பிரிவின் தலைமை பொறுப்பு ரங்கராஜனுக்கு வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து சேவை முடங்கியுள்ள நிலையில் ரங்கராஜனின் மேற்கிந்தியத் தீவுகள் பயணம் தற்போது சிக்கலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முத்து

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon