மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

தனிமைப்படுத்திக் கொண்ட கங்குலி

தனிமைப்படுத்திக் கொண்ட கங்குலி

தனது சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ அமைப்பின் தலைவருமான சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி. பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள பெல் வியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக ஸ்னேஹாசிஷ் கங்குலியின் மனைவி மற்றும் மனைவியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அப்போது மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்து லேசான அறிகுறிகள் தென்படத் துவங்கியதால் மீண்டும் தன்னை பரிசோதனைக்கு அவர் உட்படுத்திக் கொண்டார். அதில்தான் அவருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சகோதரருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக கிரிக்கெட் சகோதரர் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் பத்து நாட்களுக்குத் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon