மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

சோகத்துக்கும் ஒரு நியாயம் வேணாமா? அப்டேட் குமாரு

சோகத்துக்கும் ஒரு நியாயம் வேணாமா? அப்டேட் குமாரு

பக்கத்து வீட்டு சொந்தக்கார தம்பி ஒருத்தன் பன்னிரெண்டாவது எக்ஸாம் எழுதி இருந்தான். காலைல ரிசல்ட் வந்துச்சே? என்ன ஏதுன்னு விசாரிச்சு வழிகாட்டுவோம்னு போனா வீட்டு வாசலில ரொம்ப சோகமா உக்காந்திட்டு இருந்தான். ‘சரி தம்பி, எதுக்கும் கவலைப் படாத. மார்க் குறையுறது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. இது ஒரு முடிவு கிடையாது. தொடக்கம் தான்’ன்னு நானா கற்பனை பண்ணி ஆறுதலோட கொஞ்சம் அட்வைஸ் வார்த்தைகளை மிக்ஸ் பண்ணி சொல்லிட்டு இருந்தேன். அதுக்கு அவன், ‘அண்ணே..அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நான் தான் ஸ்கூல்லயே ஃபர்ஸ்ட் மார்க்’க்கு சொல்றான். ‘அப்புறம் எதுக்குடா சோகம்?னு கேட்டா, ‘நான். படிச்சு பெரிய டாக்டர் ஆகி, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சு சமூகத்துக்கு சேவை செய்யணும்னு நெனச்சேன். ஆனா அது இனிமே நடக்காதே. அதான் சோகம்’னு சொல்றான். என்னாச்சுன்னு கேட்டா, ‘இன்னும் பத்தே நாள்ல கொரோனா வைரஸ் காணாம போயிரும்னு நம்ம சி.எம் ஐயா சொல்லிட்டாரே. அதான்’னு சொல்லி திரும்பவும் சோகமா இருக்கான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் வீட்டுக்கு போறேன்.

சித்ரா தேவி

செய்தி வாசிப்பவர்களின்

"புதிய உச்சத்தை தொட்டது.." என்ற வரியில் தங்கத்தையும், பெட்ரோலையும் பின்னுக்குத் தள்ளி முன்னணியிலேயே இருப்பது கொரோனோ தொற்றுகளின் எண்ணிக்கைதான்.

மயக்குநன்

நவம்பரில் ரஜினி கட்சி தொடங்குவார்!- கராத்தே தியாகராஜன்.

கட்சி தொடங்குற வரைக்கும் அவரை 'சத்தியமா விடவே கூடாது'ன்னு முடிவே பண்ணிட்டாரு போலிருக்கே..?!

ச ப் பா ணி

மெடிசன் படிச்சிட்டு ஏழைகளுக்கு சேவை செய்றேனு சொல்வதும்,

மேரேஜ் முடிச்சிட்டு மாமியாரை கூட இருந்து பார்த்துக்குவேனு சொல்றதும் ஒன்றே

ரஹீம் கஸ்ஸாலி

அதி'காரம்' உரைப்பையும்

'அதிகாரம்' போதையையும் தர வல்லது.

TR

நம்மை புரியாத நபர்களுடன்

பயணிப்பது நம்மளை நாமே புதைகுழிக்குள் தள்ளுவதற்கு சமம்

நாகராஜ சோழன் MA.MLA

கொரோனா நிதி எவ்வளவு பெறப்பட்டது என்பதை வெளியிடுவதில் தமிழ் நாடு அரசுக்கு என்ன சிரமம்? - நீதி மன்றம் கேள்வி.

E.P.S மைண்ட் வாய்ஸ்~

PM care நிதி பத்தி சொல்ல சொல்லுங்க,

நாங்களும் சொல்றோம்...

எனக்கொரு டவுட்டு ⁉

அப்றம் இன்னைக்கு +2 ரிசல்ட், உன் பையன் மார்க் எவ்வளவு.!?

அம்மா : 400

பையன் : 320

சொந்தக்காரன் : !?!?!?

கோழியின் கிறுக்கல்!!

பெண்கள் அதிகமாக வாங்குவதாலோ அதற்கு பெயர் மதிப்"பெண்"!?

ச ப் பா ணி

வெளிநாட்டில வேகமாக பரவும்போது பத்திரமா வீட்டுக்குள் இருந்தோம். ஆனால் இப்போது பக்கத்து வீட்டுக்கு வந்தாலும் பந்தாவாய் வெளிய சுத்தறோம்

ச.ரா.எதார்த்தமானவள்

பணத்தை வைத்து எதையும் சாதித்து விட முடியுமா என்று தெரியல..

ஆனா பணம் இருந்தால் கொஞ்சம் தைரியமும் நம்பிக்கையும் இருப்பதை மறுக்கவும் முடியாது

-லாக் ஆஃப்

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon