மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

பெற்றோரின் டிகிரி பார்த்து குழந்தைக்கு சீட்: சேரன் கேள்வி!

பெற்றோரின் டிகிரி பார்த்து குழந்தைக்கு சீட்: சேரன் கேள்வி!

‘பெற்றோர் டிகிரி படித்திருந்தால் தான் குழந்தைக்கு பள்ளியில் சீட்டே கிடைக்கும் என்ற நிலை எப்படி வந்தது?’ என்று இயக்குநர் சேரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 118ஆவது பிறந்த தினம் நேற்று(ஜூலை 15) கொண்டாடப்பட்டது. அதனையொட்டி தமிழக அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் அவரை நினைவு கூர்ந்து வாழ்த்து செய்திகளை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் காமராஜரின் பெருமைகளை விளக்கி ஒரு பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “உயர்ந்த மனிதர்கள் நிறையபேர். இவர் உயர்ந்த தலைவர். இன்று படித்து பெரிய பெரிய வேலையில் இருப்பவர்கள் எல்லாம் இவர் ஆட்சி காலத்தில் இலவசமாக படித்து பட்டம் வாங்கியவர்கள் தான். குழந்தைகளுக்கு மதிய உணவு என்ற திட்டத்தை கொண்டு வந்ததே ஏழையின் பிரச்னை என்ன என்பதை அறிந்த இந்த தலைவர் தான்.

பாகுபாடற்ற இலவச கல்வி, அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள், பள்ளிக்குழந்தைகளின் ஏற்றதாழ்வை நீக்க சீருடை, அரசு வேலைகளில் திறமையான ஏழை மாணவர்களுக்கு முதலிடம் எல்லாம் சிந்தித்த தலைவன். கைநாட்டு போடும் ஏழைகளின் குழந்தைகள் படிக்க ஆசைப்பட்ட தலைவர் வாழ்ந்த நாட்டில் இன்று பெற்றோர் டிகிரி படித்திருந்தால் தான் குழந்தைக்கு பள்ளியில் சீட்டே கிடைக்கும் என்ற நிலை எப்படி வந்தது? காமராஜர் காலத்தில் எல்லோரின் வாழ்வும் சிறப்பாக பொற்காலமாக இருந்தது. வாழட்டும் அந்த தலைவனின் புகழ். ” என்று தெரிவித்துள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon